தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/பாஜ.,வின் அடுத்த இலக்கு பஞ்சாப்!

பாஜ.,வின் அடுத்த இலக்கு பஞ்சாப்!

பாஜ.,வின் அடுத்த இலக்கு பஞ்சாப்!

3


ADDED : ஜூன் 21, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 01:24 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லியை ஆம் ஆத்மியிடமிருந்து கைப்பற்றி, பா.ஜ.,வின் ரேகா குப்தா முதல்வராக உள்ளார். ஒடிஷாவில் நவீன் பட்நாயக்கை தோற்கடித்து, பா.ஜ., வெற்றி; அசாமில் மீண்டும் பா.ஜ., வெற்றி; மேற்கு வங்கத்திலோ மம்தா பானர்ஜிக்கு படுதோல்வியை கொடுத்து, அவரது கட்சியே இப்போது உடைந்து விட்டது. இப்படி, தான் எடுத்த வேலையை பா.ஜ.,வின் வெற்றியாக மாற்றியவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இவரது அடுத்த இலக்கு பஞ்சாப். இங்கு, ஆம் ஆத்மியின் பகவந்த் மான் முதல்வராக உள்ளார். பயங்கர குடிகாரர் என, இவர் மீது பலத்த குற்றச்சாட்டு உண்டு. அத்துடன் சட்ட சபைக்கும் குடித்து விட்டுத்தான் வருகிறார் என, எதிர்க்கட்சிக ள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

வ ரும் 2027 பிப்ரவரி அல்லது மார்ச்சில், பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 2022ல் நடந்த தேர்தலில், பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., தோல்வி அடைந்தது.

இம்முறை 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பா.ஜ., முடிவெடுத்துள்ளது. மத்திய இணை அமைச்சராக உள்ள, பஞ்சாபைச் சேர்ந்த ரவ்நீத் சிங் பிட்டு என்பவரை, முதல்வர் வேட்பாளராக களமிறக்க அமித் ஷா முடிவெடுத்துள்ளாராம். தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள பிட்டுவின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைகிறது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இருப்பதால், இவருக்கு மீண்டும் ராஜ்யசபா பதவி வழங்கப்படவில்லை.

பிட்டுவின் குடும்பம் பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரசைச் சேர்ந்த இவரது தாத்தா பியண்ட் சிங், பஞ்சாப் முதல்வராக பதவி வகித்தார். காலிஸ்தான் தீவிரவாதிகளால், 1995ல் படுகொலை செய்யப்பட்டார். டில்லியை கெஜ்ரிவாலிடமிருந்து பறித்தது போல, பஞ்சாபிலும் பா.ஜ.,வின் வெற்றிக்காக களமிறங்கியுள்ளார் அமித் ஷா. ஆனால், தமிழகத்தில் தான் அமித் ஷாவின், 'மேஜிக்' வேலை செய்யவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us