தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ பாடல் பதிப்புரிமை வழக்கு ரஹ்மானுக்கு நிம்மதி

பாடல் பதிப்புரிமை வழக்கு ரஹ்மானுக்கு நிம்மதி

பாடல் பதிப்புரிமை வழக்கு ரஹ்மானுக்கு நிம்மதி


ADDED : செப் 25, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்ற பாடலுக்கான பதிப்புரிமை வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தனி நீதிபதியின் உத்தரவை டில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தில் இடம்பெற்ற, 'வீரா ராஜ வீர சூரா...' பாடலில் இடம் பெற்ற மெட்டை, தங்கள் அனுமதியின்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியதாக பாடகர் வாசுபுதின் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கு தொடர்பாக 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தும்படியும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, டில்லி உயர் நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்துவது மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

அதே நேரத்தில், பாடல் உரிமை தொடர்பான விவகாரத்திற்குள் நாங்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை எனவும் தெளிவுபடுத்தினர்.

- டில்லி சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us