சென்னை மாணவர்களுடன் ராகுல் கட்டிப்பிடித்து ஆரவாரம்
சென்னை மாணவர்களுடன் ராகுல் கட்டிப்பிடித்து ஆரவாரம்
ADDED : பிப் 12, 2025 05:23 AM

டில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற, சென்னை கல்லுாரி மாணவ - மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இளைஞர்களிடம் பழகி, அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து, கட்சியை வழிநடத்த ராகுல் விரும்புகிறார். இதற்காக, நாடு முழுதுமுள்ள கல்லுாரி மாணவர்களை அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடும் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
ராகுல் உற்சாகம்
அதன்படி, சென்னை மாநிலக் கல்லுாரி உள்ளிட்ட சில கல்லுாரி மாணவ --- மாணவியர், 125 பேர் டில்லி சென்றனர். பார்லிமென்ட் கூட்ட அரங்கில் நடந்த விவாதங்களைப் பார்த்தபின், தமிழக காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் சின்னதம்பி தலைமையில், ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ராகுல் கேட்ட கேள்விகளுக்கு, மாணவர்கள் சரியாக பதில் அளித்தனர். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுலும் பதிலளித்தார். அதில் உற்சாகம் அடைந்த ராகுல், மாணவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ராகுலுடன், 'செல்பி' எடுத்து, மாணவர் --- மாணவியரும் ஆரவாரம் செய்தனர்.
![]() |
மகிழ்ச்சி
எங்கள், 'டிசர்ட்'டில் கையெழுத்திடும்படி கேட்டதும், அவர் கையெழுத்திட்டார். மகிழ்ச்சி, உற்சாகம் மிகுதி காரணமாக, சில மாணவர்கள், ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். பதிலுக்கு மாணவர்களை கட்டிப்பிடித்து ராகுலும் முத்தம் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இறுதியில் மாணவ-மாணவியருக்கு ஜனநாயகத்தையும், மதசார்பின்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என, ராகுல் அறிவுரை கூறினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -


