'ரயில்வே திட்டங்கள் தாமதமாக தமிழக அரசே காரணம்' ரயில்வே அமைச்சர் குற்றச்சாட்டு
'ரயில்வே திட்டங்கள் தாமதமாக தமிழக அரசே காரணம்' ரயில்வே அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஆக 08, 2025 12:46 AM

'தமிழகத்தில், ரயில்வே திட்டங்கள் தாமதம் ஆவதற்கு, தமிழக அரசிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு இல்லாததே காரணம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக ரயில்வே திட்டங்கள் தாமதம் ஆவது குறித்து, தென் சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்லிமென்டில் நேற்று அளித்த பதில்:
தமிழக அரசிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு இல்லை. கடந்த ஜூன் வரை, தமிழகத்தில் ரயில் பாதைகள் அமைந்துள்ள பகுதிகளில், 235 மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்களை அமைப்பதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், இவற்றில் 82 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் அமைப்பதற்கான திட்டங்களுக்கு, தமிழக அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒப்புதல்கள் கிடைத்தபாடில்லை.
அதாவது, தமிழக அரசு நிலம் கையக ப்படுத்தி தராததால், 22 திட்டங்கள்; திட்டப்பணிகள் நிறைவுக்கு ஒப்புதல் தரா ததால், 26 திட்டங்கள்; ரயில்பாதை சீரமைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்காததால், 23 திட்டங்கள்; சட்டம் - ஒழுங்கு, போராட்டம் ஆகிய பிரச்னைகள் காரணமாக, 11 திட்ட ங்களும் கிடப்பில் உள்ளன.
தமிழக ரயில்வே திட்டங்களில், 2014 - 25 ஜூன் வரை, தரைக்கு மேல் மற்றும் தரைக்கு அடியில், 747 பாலங்கள் கட்டப் பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

