தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு பதவி; பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை

 ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு பதவி; பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை

 ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு பதவி; பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை

1


ADDED : ஜூலை 16, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : ஜூலை 16, 2026 05:59 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு, கட்சியில் பதவி வழங்குவது குறித்து, பா.ம.க., மாவட்ட செயலர்களுடன், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால், இருவரும் தனித்தனியே கட்சி நிர்வாகிகளை நியமித்தனர்.

சட்டசபை தேர்தலுக்கு பின், இருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பை, அன்புமணியிடம் ராமதாஸ் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், பா.ம.க., 38ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலர்களுடன் அன்புமணி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ராமதாசால் நியமிக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலர்களில், யார் யாருக்கு கட்சியில் பதவி கொடுப்பது என்பது குறித்து, மாவட்ட செயலர்களிடம் அன்புமணி கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அன்புமணி, 'இப்போது நாம் ஒன்றாகி விட்டோம்; கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

கட்சியின் 38ம் ஆண்டு விழாவை, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாட வேண்டும். அனைத்து கிராமங்களிலும், கட்சி கொடியேற்ற வேண்டும்' என அறிவுறுத்தியதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து, ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் இன்று அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.

இன்று தனி கூட்டம் போடும் 'மாஜி'


ராமதாசால் பா.ம.க., இணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., அருள் நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: தந்தை - மகன் பிரியக்கூடாது என கெஞ்சினோம். தந்தை - மகன் இணைந்த பின், ராமதாசை சந்திக்க நிர்வாகிகளுடன் சென்று இரண்டு மணி நேரம் காத்திருந்தேன். ஆனால், ராமதாஸ் கதவை சாத்திக்கொண்டாரா அல்லது கதவு சாத்தப்பட்டதா என தெரியவில்லை. அவருடன் இருந்தது, நாங்கள் செய்த பாவமா?
இருவரும் பிரிந்து இருந்தபோது, அன்புமணியை திட்டச்சொல்லி, ராமதாஸ் 10 பாயின்ட் தருவார். செய்தியாளர்களிடம் நான், இரண்டு பாயின்ட் மட்டும் சொல்வேன். ராமதாஸ் தரப்பில் ஒரு கட்சி உருவானது; நிர்வாகிகள் உள்ளனர். அவர், மகனுடன் இணைந்து விட்டதால், என்ன செய்வது என குழப்பத்தில் உள்ளோம்.
சேலத்தில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. என்ன செய்யலாம்; எங்கு செல்லலாம் என்பது குறித்து நல்ல முடிவு எடுப்போம். கூட்டத்தில், அனைவரும் தெரிவிக்கும் கருத்தின் படி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us