sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஆதவ் பேசிய வீடியோ வெளியீடு; விஜய் விசாரணையால் சலசலப்பு

/

ஆதவ் பேசிய வீடியோ வெளியீடு; விஜய் விசாரணையால் சலசலப்பு

ஆதவ் பேசிய வீடியோ வெளியீடு; விஜய் விசாரணையால் சலசலப்பு

ஆதவ் பேசிய வீடியோ வெளியீடு; விஜய் விசாரணையால் சலசலப்பு

4


ADDED : ஜூன் 03, 2025 03:14 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 03:14 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குறித்து, ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோவை வெளியிட்டது யார் என, விஜய் நடத்திய விசாரணை, த.வெ.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சி தலைவர் விஜய்க்கு அடுத்து அதிகார மையமாக, புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த் உள்ளார்.

இவர் த.வெ.க., பொதுச்செயலராக உள்ளார். விஜய் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வது, விஜய்க்கு பதிலாக, கட்சி நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது என, ஆனந்த் மிகுந்த பரபரப்பாக உள்ளார்.

அதிகார மையம்


இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, த.வெ.க.,வில் இணைந்து, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் பதவியை பெற்றுள்ளார்.

ஆனந்துக்கு இணையாக, கட்சியில் புதிய அதிகார மையமாக, அவர் உருவெடுத்து வருகிறார். விஜய்யுடன் இவரது நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சட்டசபை தொகுதிவாரியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விருது வழங்கும் விழா, த.வெ.க., சார்பில் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, 80 தொகுதி மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, கடந்த மாதம் 30ம் தேதி மாமல்லபுரத்தில், தனியார் விடுதியில் நடந்தது.

விழா ஏற்பாடுகளை கவனிக்கச் சென்ற ஆனந்துடன், ஆதவ் அர்ஜுனா பேசியபடியே நடந்து சென்றார். அப்போது, அண்ணாமலை மற்றும் பழனிசாமியை ஒப்பிட்டு, அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.

இது அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி பேச்சுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்தது.

இது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதவ் அர்ஜுனாவை அழைத்து கண்டித்துள்ளார். இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அவர் அறிக்கை வெளியிட்டார். அத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டது யார் என, விஜய் விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு கிடைத்த தகவல், த.வெ.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனி ஐ.டி., விங்க்


இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

கட்சியில் தனக்கு போட்டியாக யாரும் வரக்கூடாது என்பதில், ஆனந்த் உறுதியாக உள்ளார். இதற்காக, பல்வேறு ராஜதந்திர அரசியலை, அவர் முன்னெடுத்து வருகிறார். தனியார் 'டிவி'யில் பணியாற்றும் மூன்று பேர் உதவியுடன், தன்னை விளம்பரப்படுத்த, தனியாக ஐ.டி., விங்கை அவர் உருவாக்கி உள்ளார்.

இதை வைத்து, விஜய்க்கு இணையாக, தனக்கு விளம்பரங்களை செய்து வருகிறார். அவர்கள் வாயிலாகவே, திட்டமிட்டு ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியில் ஆதவ் அர்ஜுனா அதிகாரம் செலுத்துவதற்கு, ஆனந்த் மறைமுகமாக தடை போட முயற்சி செய்வது அம்பலமாகி உள்ளது. இதை விஜய் கவனத்திற்கு நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனர். அவரும் ஆனந்திடம் விளக்கம் கேட்டுள்ளார். இது கட்சியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us