தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ விருப்ப மனு பணத்தை திரும்ப கொடுங்க: தலைமைக்கு தி.மு.க.,வினர் கோரிக்கை

 விருப்ப மனு பணத்தை திரும்ப கொடுங்க: தலைமைக்கு தி.மு.க.,வினர் கோரிக்கை

 விருப்ப மனு பணத்தை திரும்ப கொடுங்க: தலைமைக்கு தி.மு.க.,வினர் கோரிக்கை

10


ADDED : ஜூன் 02, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 04:49 AM

10


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகளைத் தவிர, கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பணம் கட்டிய தி.மு.க.,வினர், தங்கள் பணத்தை திரும்ப தருமாறு கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு முன், 234 தொகுதிகளில் இருந்தும், போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, விருப்ப மனுக்களை தி.மு.க., பெற்றது. ௧,௦௦௦ ரூபாய் விண்ணப்ப படிவ கட்டணத்துடன், பொதுத்தொகுதிக்கு 25,000 ரூபாய், மகளிர் மற்றும் தனித்தொகுதிகளுக்கு 15,000 ரூபாய், என விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதி களுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

அந்த வகையில், 23 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலானது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், விருப்ப மனு கட்டணம் செலுத்தியவர்களுக்கு, அந்தப் பணம் திரும்ப வழங்கப்படும் என, தி.மு.க., தலைமை அறிவித்திருந்தது.

தற்போது, சட்டசபை தேர்தல் முடிந்து, ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு செலுத்திய தி.மு.க.,வினர், தங்கள் பணத்தை திரும்ப தர வேண்டும் என, தி.மு.க., தலைமைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us