ADDED : பிப் 23, 2024 02:03 AM

தமிழகத்தில், தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க, 391 கூட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7,693 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, 39,359 கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து, 6.22 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் விற்போருக்கான அபராத தொகை, முதல்முறை 5,000; இரண்டாம் முறை, 10,000 ரூபாயாக இருந்தது. தற்போது, முதல் முறை 25,000; இரண்டாம் முறை 50,000; மூன்றாம் முறை 1 லட்சம் ரூபாய் என, அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனை கடைகளுக்கு சீல் வைப்பதுடன், கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது.
- ககன்தீப்சிங் பேடி,மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர்.