ADDED : அக் 25, 2025 06:31 AM

தி.மு.க., ஆட்சியில், நான்கரை ஆண்டுகளில், 3.75 லட்சம் மெட்ரிக் டன் நெல், தமிழக அரசால் வீணாக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய, விவசாயிகள் 40 ரூபாய் கொடுக்க வேண்டும். மது பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வாங்குகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விவசாயத்துக்கு செலவு செய்யவில்லை; கல்வித் துறைக்கு எதுவும் செய்யவில்லை.
'ஈ.வெ.ரா., சிலை மீது கை வைத்தால், கையை வெட்டுவேன்' என்று வன்முறையை துாண்டும் வகையில் வைகோ பேசியுள்ளார். ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில், தமிழகத்தில் தினந்தோறும் பேசி வருகின்றனர்.
டி.ஜி.பி.,யை நியமிக்க முடியாத கையாலாகாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது. கள்ளக்குறிச்சி சாராய மரணத்தை போல, கரூர் சம்பவத்தில், எஸ்.பி., கலெக்டரை ஏன் மாற்றவில்லை? காவல்துறையிலும், தி.மு.க., அரசியல் செய்கிறது.
- நாராயணன் திருப்பதி
தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,

