தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/அசமஞ்ச ஒப்பந்ததாரரால் இதுவரை வீண் ரூ.1,400 கோடி!

அசமஞ்ச ஒப்பந்ததாரரால் இதுவரை வீண் ரூ.1,400 கோடி!

அசமஞ்ச ஒப்பந்ததாரரால் இதுவரை வீண் ரூ.1,400 கோடி!


UPDATED : ஜன 04, 2024 05:41 AM

ADDED : ஜன 03, 2024 11:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2024 05:41 AM ADDED : ஜன 03, 2024 11:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசு, 12 கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை மட்டுமின்றி மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இணைமின் நிலையங்கள் அமைக்கும் பணியை, 2010ல் துவக்கியது.

திட்ட செலவான, 965 கோடி ரூபாயை, இந்திய புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து, மின் வாரியம் கடன் வாங்கி உள்ளது; 18 மாதங்களில் மின் உற்பத்தி துவங்க திட்டம். இதுவரை, ஏழு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, உற்பத்தி துவக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்லில் உள்ள சேலம் கூட்டுறவு; தர்மபுரி, சுப்ரமணிய சிவா; கள்ளக்குறிச்சி 1, கள்ளக்குறிச்சி 2, மதுரை தேசிய கூட்டுறவு ஆகிய ஆலைகளில், இணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கப்படவில்லை.

Image 1215437
திட்டத்திற்கென வாங்கிய தொகைக்கு, இதுவரை, 13 ஆண்டுகளாக, 1,400 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுஉள்ளது. ஒப்பந்தம் செய்துள்ள, 'வால்சந்த்' நிறுவனம், திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளதால், அரசு பணம் வீணாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us