sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஆளுங்கட்சி எம்.பி., மேடையில 'ஆபாச ரீலு' மகளும், மருமகனும் பண்றாங்களாம் 'டீலு'

/

ஆளுங்கட்சி எம்.பி., மேடையில 'ஆபாச ரீலு' மகளும், மருமகனும் பண்றாங்களாம் 'டீலு'

ஆளுங்கட்சி எம்.பி., மேடையில 'ஆபாச ரீலு' மகளும், மருமகனும் பண்றாங்களாம் 'டீலு'

ஆளுங்கட்சி எம்.பி., மேடையில 'ஆபாச ரீலு' மகளும், மருமகனும் பண்றாங்களாம் 'டீலு'


UPDATED : மார் 05, 2024 02:23 AM

ADDED : மார் 05, 2024 01:09 AM

Google News

UPDATED : மார் 05, 2024 02:23 AM ADDED : மார் 05, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக சித்ராவும், மித்ராவும் கார்ப்பரேஷன் ஆபீசுக்கு சென்றிருந்தனர். விக்டோரியா ஹால் அருகே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, கடை வீதியில் நடக்கத் துவங்கினர்.

தி.மு.க.,வினர் ஒட்டியிருந்த போஸ்டரை பார்த்த சித்ரா, ''ஆ.ராஜா பங்கேற்ற கூட்டத்துக்கு போயிருந்தியா; கட்சி நிர்வாகிகளே அதிருப்தி அடைஞ்சு நெளிஞ்சாங்களாமே...'' என கேட்டாள்.

''ஆமாக்கா... தெளிவான மனநிலையில் இல்லாம, ரொம்பவே குழப்பமா பேசுனாரு... அவரிடம் இன்னும் தாழ்வு மனப்பான்மை போகல போலிருக்கு. வடமாநிலங்களை சேர்ந்தவங்க பெயருக்கு பின், ஜாதிப்பெயரை சேர்த்துக்கிறாங்கன்னு அலுத்துக்கிட்ட அவரு, மேடையில இருந்த ஒவ்வொரு நிர்வாகி பெயரையும் சொன்னதோட, அவங்க ஜாதிப்பெயரை அடிக்கடி சுட்டிக் காட்டுனாரு. அதனால, நிர்வாகிகள் பலரும் சங்கடப்பட்டாங்க. இதையெல்லாம் மேடையில ஏன் பேசுறாருன்னு புலம்புனாங்க...''

''அப்புறம்... மணிப்பூர் கலவரத்துல பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புன்னு சொல்லி, கொஞ்சம் ஓவரா... ஆபாசமா பேசுனதை, மகளிரணியினர் விரும்பலை.

சீட்ல இருந்து பெண்கள் எழுந்து செல்ல ஆரம்பிச்சதும், பேச்சை முடிச்சிட்டாரு. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடத்திட்டு, கட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரையே ஏற்படுத்திட்டு போயிருக்காரேன்னு, உடன்பிறப்புகள் புலம்பிட்டு இருக்காங்க,''

தொடரும் இழுபறி


''தி.மு.க., கூட்டணியில தொகுதி யாருக்குன்னு முடிவாகிடுச்சா...'' என, வம்புக்கு இழுத்தாள் சித்ரா.

''கம்யூ., கட்சிக்கு மறுபடியும் கொடுக்கக் கூடாதுன்னு, ஆளுங்கட்சிக்காரங்க ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்காங்களாம்; அப்படி கொடுத்தா தேர்தல் வேலை செய்ய மாட்டோம்னு திட்டவட்டமா சொல்லிட்டாங்களாம். கமலுக்கு கொடுத்தாலும், இதே நிலைதான் ஏற்படுமோன்னு நிர்வாகிகள் பேசிட்டு இருக்காங்க,''

''இருந்தாலும், கம்யூ., கட்சிக்காரங்க, தி.மு.க., தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துட்டு இருக்காங்க. இன்னும் சில நாட்கள்ல முடிவாகிடும்னு சொல்றாங்க. கம்யூ., கட்சிக்கு தொகுதி உறுதியானா, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முன்னெடுத்து, பிரசாரம் செஞ்ச பெண் நிர்வாகியை வேட்பாளரா களமிறக்க, ஆலோசனை செய்றாங்களாம்,''

ஜாதிக்கு ஒருத்தர் ரெடி


''அ.தி.மு.க., தரப்புல வேட்பாளர்களை இறுதி செஞ்சிட்டதா சொல்றாங்களே, உண்மைதானா,''

''கோவை தொகுதிக்கு ரெண்டு பேர் அடிபடுது. முன்னாள் அமைச்சருக்கு இவர்களில் யாரு விசுவாசமா இருப்பாங்களோ, அவருக்கே வாய்ப்பு கொடுப்பாங்கன்னு ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க. தேர்தல் செலவை சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.,வை ஏத்துக்கச் சொல்லி இருக்காங்களாம்,''

காத்திருக்கும் பா.ஜ.,


''பா.ஜ., தரப்புல ஏதாச்சும் அப்டேட்...''

''தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி போட்டி போடுறதுக்கு ஆசைப்பட்டாங்க. மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைஞ்சா, சென்ட்ரல் மினிஸ்டராகிடலாம்னு நினைக்கிறாங்க.

அ.தி.மு.க., கூட்டணி இல்லாததால தயக்கம் இருக்குதாம். தி.மு.க., கூட்டணியில கமல் போட்டியிட்டா, கண்டிப்பா, வானதியை களமிறக்குவாங்கன்னு, தாமரை கட்சிக்காரங்க சொல்றாங்க. அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஏற்ப, பா.ஜ.,வுல வேட்பாளர்களை நிறுத்துறதுக்கு ஐடியா வச்சிருக்காங்களாம்,''

போலீசுக்கு எதிர்ப்பு


ராஜவீதியில் நடந்து சென்றபோது, தேர்நிலைத்திடலில் நிறுத்தியிருந்த கோனியம்மன் தேரைப்பார்த்த சித்ரா, ''மித்து, தேர்த்திருவிழா நடத்துறது சம்பந்தமா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துல அமைதி கூட்டம் நடந்திருக்கு. அப்போ, தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் அமைக்கக் கூடாதுன்னு போலீஸ் அதிகாரி ஒருத்தரு சொல்லி இருக்காரு.

ஏன்னா, ஒரே இடத்துல ஏகப்பட்ட லேடீஸ் கூடுறாங்க; திருடனுங்க நுழைஞ்சு நகைகளை திருடிட்டு போயிடுறாங்கன்னு சொல்லி இருக்காங்க. பந்தல் அமைச்சா, அமைப்பாளர்களே பொறுப்பு ஏத்துக்கிடணும்னு சொல்லியிருக்காரு. நம்மூர் காவல் தெய்வத்துக்கு நடத்துற விழாவுக்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடு விதிச்சதுக்கு, கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க,''

''இந்த விஷயம் கசிந்ததும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை நிருபர்கள் தொடர்புகொண்டு விசாரிச்சிருக்காங்க. அதுக்கு அவர், 'அப்படிச் சொல்லலை. நல்ல தண்ணீர் 'யூஸ்' பண்ணனும்னு சொன்னேன்'னு மழுப்பி இருக்காரு' என்றாள்.

அரசு மீது அதிருப்தி


''பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு லட்சக்கணக்குல பக்தர்கள் போறாங்களே... ஏதாச்சும் வசதி செஞ்சு கொடுத்திருக்காங்களா...''

''அதையேன் கேக்குற... ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.35-40க்கு விற்பனை செய்றாங்களாம். மலையில ஏகப்பட்ட பேரு கடைகள் நடத்துறதுக்கு, பாரஸ்ட்டுல இருந்து அனுமதி கொடுத்திருங்காங்க. 'பிளாக் காபி' 30 ரூபாய்க்கு வித்தாங்களாம். ஒரு தர்பூசணி பழத்தை, 40 துண்டா பிரிச்சு, ஒரு துண்டு பழத்தை, 20 ரூபாய்க்கு விக்கிறாங்களாம்,''

''பக்தர் ஒருத்தரு திடீருன்னு மயங்கி விழுந்துட்டாராம். அவரை துாக்கிட்டு கீழே இறக்கிட்டு வர ஆளில்லையாம். துாக்கிட்டு வந்து, ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போறதுக்கு, 13 ஆயிரம் ரூபாய் வசூலிச்சிருக்காங்க. இதை எல்லாம் பார்த்த சக பக்தர்கள் கொந்தளிச்சு, கடைக்காரங்ககிட்ட கேள்வி கேட்டிருக்காங்க,''

''அதுக்கு, ஏகப்பட்ட பேருக்கு கப்பம் கட்டணுமுங்கன்னு 'அசால்ட்'டா பதில் சொன்னாங்களாம். இது சம்பந்தமா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டுக்கறதில்லை; பாரஸ்ட் ஆபீசர்களும் நடவடிக்கை எடுக்காம இருக்கறதுனால, மலையேறுற பக்தர்கள், தி.மு.க., ஆட்சி மேல கடுமையான அதிருப்தியில இருக்காங்க,''

குடும்ப ராஜ்ஜியம்


இருவரும் பேசிக் கொண்டே, கார்ப்பரேஷன் ஆபீசுக்கு திரும்பி வந்தனர். கமிஷனர் காரை பார்த்த மித்ரா, ''கார்ப்பரேஷன்ல கட்டட வரைபட அனுமதி கொடுக்குறதுல கரன்சி இல்லாம, எந்த ஆபீசரும் கையெழுத்து போடுறது இல்லையாமே... '' என கேட்டாள்.

''ஆமாப்பா... ஆன்லைன்ல அனுமதி தரப்படும்; ஒற்றை சாளர முறை பின்பற்றப்படும்னு சொல்றது எல்லாம்... சும்மா கவர்ச்சிகரமான அறிவிப்பா இருக்குது. உண்மையில அப்படியில்லை.

அப்ளை பண்ணிட்டு, மாசக்கணக்குல காத்திருக்க வேண்டியிருக்கு. இதையெல்லாம், கார்ப்பரேஷன் கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் சொன்னா... 'அப்படி எல்லாம் செய்றதுக்கு சான்சே இல்லை; பெண்டிங் பைல் இல்லவே இல்லைன்னு சத்தியம் செய்யாத குறையா சொல்றாரு,''

''வடக்கு மண்டலத்துல ரெண்டு வார்டுகளை கவனிக்கிற ஒரு இன்ஜினியர் இருக்காரு. கட்டட அனுமதிக்கு வர்ற பைல்களை அவரே, டவுன் பிளானிங் செக்சனுக்கு 'ரெக்கமண்ட்' பண்ணி அனுப்பனும்.

இவரது சம்பந்தியும், மருமகனும் பொறியாளர்களாம். மருமகன் மூலமா கட்டட அனுமதிக்கு பைல் வந்தா மட்டுமே கையெழுத்து போட்டு, அனுப்புறாராம்; இல்லேன்னா திருப்பி விட்டுர்றாராம்,''

''கார்ப்பரேஷன்ல இவருக்குக் கொடுத்த 'யூசர் நேம்' 'பாஸ்வேர்டு' ரெண்டையும், மகளுக்கு கொடுத்துட்டாராம். வர்ற பைல்களை மகளும், மருமகனும் பார்த்து, 'டீல்' பண்றாங்களாம். இதெல்லாம், கமிஷனர் கவனத்துக்கு போறதில்லை போலிருக்கு,'' என்றாள் சித்ரா.

அடுத்து ஆரம்பித்த மித்ரா, ''அன்னுார் ஏரியாவுல ரெண்டு இடத்துல மட்டும் மண் எடுக்க அனுமதி வாங்கிட்டு, இருபது இடத்துல மண் அள்ளி கடத்துறாங்க. குறிப்பா, குப்பனுார், அக்கறை செங்கப்பள்ளி ஏரியாவுல கடத்தல் சம்பவம் அதிகமா நடக்குதாம்,''

''ஆளுங்கட்சி தரப்புல நடக்குற அழுத்தம் காரணமா, மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையும், கனிம வளத்துறையும் கண்டுக்காம வேடிக்கை பார்க்குறாங்க. தலைமை செயலகத்துல இருந்து 'டோஸ்' விட்டா மட்டும், பெயரளவுக்கு அபராதம் விதிச்சு, பைல் குளோஸ் பண்றாங்களாம்,'' என்றாள்.

அப்போது, கிரீன் சிக்னல் விழுந்ததும், ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.






      Dinamalar
      Follow us