தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/சனாதனியின் காலை உணவு; வீடியோ வலைதளத்தில் வைரல்

சனாதனியின் காலை உணவு; வீடியோ வலைதளத்தில் வைரல்

சனாதனியின் காலை உணவு; வீடியோ வலைதளத்தில் வைரல்

6


UPDATED : அக் 05, 2026 05:12 AM

ADDED : அக் 05, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 05:12 AM ADDED : அக் 05, 2026 05:09 AM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இசையில் மெய்மறந்த முதியோர்


உ.பி., நொய்டாவில் காலை நடைபயிற்சிக்கு சென்ற முதியவர்கள், பூங்காவில் அமர்ந்தபடி பாடும் வீடியோ, ஏராளமானோரை சபாஷ் போட வைத்துள்ளது. அது ஒரு அபார்ட்மென்ட் பூங்கா. நண்பர்களான முதியவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர், 1958ம் ஆண்டு வெளியான, 'தில்லி கா தக்' என்ற ஹிந்தி படத்தில் இருந்து, 'யெ ராத்தே யெ மோஷம்' என்று தொடங்கும் ஹிட் பாடலை பாடுகிறார். அவருடனே சேர்ந்து மற்றவர்களும் பாடுகின்றனர்.

Image 1626520

ஒலிக்கும் இசைக்கு தகுந்தபடி அனைவரும் சேர்ந்து பாட, கச்சேரி போல நிகழ்ச்சி நடக்கிறது. கண்களை மூடி சிலரும், கூடவே பாடி சிலரும், ஆடிக்கொண்டே சிலரும் அந்த பாடலை அனுபவிக்கும் வீடியோ, வலைதளங்களை தெறிக்க விடுகிறது.

சனாதனியின் காலை உணவு; வீடியோ வலைதளத்தில் வைரல்


மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த தமல், 2009ல் இந்தியா வந்தவர். மேற்கு வங்கத்தின் மாயபூர் குருகுலத்தில் தங்கி சமஸ்கிருதம், வேத மந்திரங்கள், பூஜை சடங்குகளை கற்றுக் கொண்டார். கடந்த, 2021 முதல் ஹோமம் நடத்தி வருகிறார். ஆன்மிகம், உடல் உறுதி தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 'நான் ஒரு வெஜிடேரியன் பாடி பில்டர்; சனாதன தர்மத்தை பின்பற்றுபவன்' என்றும் பெருமையுடன் கூறுகிறார்.

'ஒரு சனாதனியின் புரோட்டீன் காலை உணவு' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட வீடியோ, இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சோயா பால், தயிர், வெள்ளரி, தக்காளி, ஆப்பிள், பிரெட் எடுத்துக் கொள்கிறார். சோயா பீன்ஸை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நெய்யில் சமைக்கிறார். கூடவே சீரகம், மஞ்சள், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்க்கிறார். கடைசியில் சில துளசி இலைகளையும் சேர்த்துக் கொள்கிறார்.

இப்படி தயார் செய்த காலை உணவுதான், 'சனாதனியின் புரோட்டீன் காலை உணவு' என்று கூறும் தமல், அதை இறைவனுக்கு படையல் வைக்கிறார். 'படையல் வைத்து விட்டால், அந்த உணவு பிரசாதம் ஆகி விடுகிறது' என்று தமல் கூறும் வீடியோ, இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

சி.ஐ.எஸ்.எப்., ஊழியருக்கு சபாஷ்!


குஜராத், சூரத் விமான நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர், மாரடைப்பால் சரிந்து, சுய நினைவிழந்து விட்டார். இதைக் கண்டதும், அருகே நின்றிருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் காவலர் அவருக்கு, 'சிபிஆர்' எனப்படும் முதலுதவி சிகிச்சை அளிக்கிறார். அவரது சிகிச்சையால், சரிந்து விழுந்த ஊழியர், நினைவு திரும்பி எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

Image 1626521

இந்த காட்சி முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பலரும் சி.ஐ.எஸ்.எப்., ஊழியரின் செயலை பாராட்டி பதிவிடுகின்றனர். பொது இடங்களில், முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளதாக, வலைதளவாசிகள் கமென்ட் செய்கின்றனர்.

பணி நிறைவு நாளில் பைலட்டுக்கு மன நிறைவு


பணி ஓய்வு பெறும் முன், தான் இயக்கும் கடைசி விமானத்தின் பயணம், மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று தான் அனைத்து பைலட்களும் விரும்புவர். அப்படித்தான் செய்தார், விமான பணிப்பெண் அஷூ யத்வாடே. விமான பயணத்தில், கையில் இருக்கும் பிஸ்கட், பால், சாக்லேட்டுகள், பாதாம் பருப்புகளை கொண்டு சுடச்சுட ஒரு கேக் செய்தார்.

Image 1626522

பணி ஓய்வு பெறும் கேப்டன், அதை சுவைத்துப் பார்த்து, 'தம்ஸ்அப்' காட்டி, 'இன்றைய தினத்தை மகிழ்ச்சியானதாக, மனம் நிறைந்ததாக மாற்றி விட்டீர்கள்' என்றார். பயணியரும், சக ஊழியர்களும், கேக் சூப்பர் என்று பாராட்டினர். 'எல்லோருடைய பாராட்டும், என் இதயத்தை நிறைத்து விட்டது' என்கிறார் அஷூ. அவரது 'கியூட்' வீடியோ, இணையத்தில் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us