தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/வி.சி.க.,வை அனுப்புங்கள்; பா.ம.க.,வை சேருங்கள்: விஜயிடம் ஆலோசனை சொன்ன அமைச்சர்கள்

வி.சி.க.,வை அனுப்புங்கள்; பா.ம.க.,வை சேருங்கள்: விஜயிடம் ஆலோசனை சொன்ன அமைச்சர்கள்

வி.சி.க.,வை அனுப்புங்கள்; பா.ம.க.,வை சேருங்கள்: விஜயிடம் ஆலோசனை சொன்ன அமைச்சர்கள்

13


ADDED : அக் 13, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

13

ADDED : அக் 13, 2026 05:51 AM


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'த.வெ.க., அமைச்சரவையில் பா.ம.க.,வை சேர்ப்பதற்கு வி.சி.க., முரண்டு பிடித்தால், அக்கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விடலாம்' என, முதல்வர் விஜயிடம் அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.

சட்டசபை தேர்தல் நேரத்தில் வி.சி.க.,வை கூட்டணியில் சேர்க்க, த.வெ.க., தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது; ஆனால், வி.சி.க., பிடிகொடுக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, இரண்டில் மட்டுமே வென்றது. ஆனால், தேர்தலுக்கு பின், த.வெ.க., ஆட்சி அமைக்க, வி.சி.க., ஆதரவு அளித்தது. அதற்கு கைமாறாக, வி.சி.க.,வுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் வி.சி.க., தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு ஆகியோர், சில நேரங்களில் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் விதமாக பேசி வருகின்றனர்; குறிப்பாக, மத்திய அரசையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்து வருகின்றனர். இதை, த.வெ.க., அமைச்சர்கள் பலர் விரும்பவில்லை.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், பா.ம.க., ஓட்டுகள் கிடைத்ததால் தான், த.வெ.க., வேட்பாளர் மரகதம் குமரவேல், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல முடிந்தததாக, த.வெ.க., அமைச்சர்கள் சிலர் கருதுகின்றனர். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், வட மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டுமானால், பா.ம.க., ஆதரவு அவசியம் என்ற முடிவுக்கும் வந்துள்ளனர்.

இதற்காக, த.வெ.க., அமைச்சரவையில் பா.ம.க.,வை சேர்க்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. பா.ம.க.,வுக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கவும் முதல்வர் விஜய் முன்வந்துள்ளார். ஆனால், பா.ம.க., அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என, வி.சி.க.,வினர் முரண்டு பிடிக்கின்றனர். இதனால், த.வெ.க., கூட்டணியில் பா.ம.க.,வை இடம் பெறச் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. அமைச்சரவையில் இடம் பெற காய் நகர்த்திய பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சவுமியா, கணேஷ்குமார் ஆகியோரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருமாவளவன், வன்னி அரசு ஆகியோரை சமரசம் செய்யும் முயற்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்; ஆனால். வி.சி.க., தலைவர்கள் பிடிகொடுக்கவில்லை. அதனால், முரண்டு பிடிக்கும் வி.சி.க.,வை வெளியேற்றி விட்டு, பா.ம.க.,வை கூட்டணியில் சேர்ப்பதற்கு அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர் முதல்வரிடம் ஆலோசனை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us