sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/ப்ரீமியம்/திருச்சி சிவா பெயர் கசிந்தது எப்படி: சரத் பவார் செய்த குழப்பம்

திருச்சி சிவா பெயர் கசிந்தது எப்படி: சரத் பவார் செய்த குழப்பம்

திருச்சி சிவா பெயர் கசிந்தது எப்படி: சரத் பவார் செய்த குழப்பம்


UPDATED : ஆக 24, 2025 07:01 AM

ADDED : ஆக 24, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2025 07:01 AM ADDED : ஆக 24, 2025 02:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 'இண்டி கூட்டணியின் சார்பாக, திருச்சி சிவா நிறுத்தப்படலாம்' என, மீடியாவில் செய்திகள் வெளியானாலும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சிவாவின் பெயர் எப்படி முதலில் வெளியானது? 'இதற்கு காரணம் சரத் பவார் தான்' என்கின்றனர். ராதாகிருஷ்ணன் பெயரை பா.ஜ., அறிவித்த உடனேயே, சிவாவின் பெயரை சிபாரிசு செய்துள்ளார் பவார்.

'ஒரு தமிழரை எதிர்த்து, இன்னொரு தமிழர் போட்டியிட்டால் தி.மு.க.,விற்கும், இண்டி கூட்டணிக்கும் நல்லது' என, பவார் கூறினாராம். இதையடுத்து, இந்த செய்தி மீடியாவில் கசிந்தது; சிவா உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். டில்லி மீடியா நண்பர்களிடம், 'இந்த செய்தியை பெரிதுபடுத்துங்கள்' என அவர் சொல்ல, டில்லி வட்டாரங்களில் சிவா ஹீரோவாகிவிட்டார்.

பவாரின் மகள் சுப்ரியா சுலேவும், கனிமொழியும் நெருங்கிய தோழிகள். சுப்ரியாவிற்கு கனிமொழி போன் செய்து, 'எதற்கு சிவாவின் பெயரை அப்பா சிபாரிசு செய்தார்; எங்களை கேட்டிருக்க வேண்டாமா?' என, கேட்டாராம். இந்த விவகாரம் குறித்து எதுவுமே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாதாம். சிவாவின் பெயர் மீடியாவில் வந்ததும், 'ஷாக்' ஆனாராம் முதல்வர்.

'விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தான் எங்கள் வேட்பாளர்' என, தி.மு.க., தரப்பில் சொல்லப்பட, அண்ணாதுரையின் பெயரும் மீடியாவில் இடம் பெற்றது. கடைசியில், ஆந்திராவை சேர்ந்த சுதர்ஷன் ரெட்டி இண்டி கூட்டணியின் வேட்பாளர் ஆனார். 'முதல்வர் ஸ்டாலினின் பிடியில் தி.மு.க., இயங்குகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறதே' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us