sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

குள்ள நரிகள் பாதுகாப்புக்காக சேலத்தில் சிறப்பு மையம்

/

குள்ள நரிகள் பாதுகாப்புக்காக சேலத்தில் சிறப்பு மையம்

குள்ள நரிகள் பாதுகாப்புக்காக சேலத்தில் சிறப்பு மையம்

குள்ள நரிகள் பாதுகாப்புக்காக சேலத்தில் சிறப்பு மையம்

12


ADDED : டிச 05, 2024 03:03 AM

Google News

ADDED : டிச 05, 2024 03:03 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேகமாக அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், 'வங்கு நரி' எனப்படும் குள்ள நரிகள் வேட்டையாடப்படுவதை தடுத்து, அதை பாதுகாப்பதற்கான சிறப்பு மையம் சேலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, யானை, புலி, சிறுத்தை போன்ற வன உயிரினங்களை பாதுகாப்பதற்கு உயர் முன்னுரிமை கிடைக்கிறது. ஆனால், காடுகளின் உயிர் சூழல் பாதுகாப்பில், பல்வேறு வகை சிறிய விலங்குகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

முன்னேற்றம்


இந்த வகையில், முள் எலி, எறும்புத்தின்னி, குள்ள நரி போன்ற விலங்குகள், குறிப்பிட்ட சில பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இவற்றை பாதுகாப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், உள்ளூர் மக்கள் இவற்றை வேட்டையாடுகின்றனர். அதனால், பெரும்பாலான சிறு விலங்குகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:


தமிழகத்தில் பெரும்பாலான காப்புக் காடுகளில், நரிகள் வாழ்கின்றன. இதில் வங்கு நரி எனப்படும் குள்ள நரி மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் இவ்வகை நரிகள் பரவலாக காணப்படுகின்றன. இங்கு வாழப்பாடி உள்ளிட்ட சில தாலுகாக்களில், பொங்கல் பண்டிகையின்போது குள்ள நரியை பிடித்து வழிபாடு செய்கின்றனர்.

இவ்வாறு பிடிக்கப்படும் குள்ள நரிகள், மீண்டும் அதன் இனத்தில் சேர முடியாமல் அழியும் நிலை ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இவ்வாறு செய்வதால், குள்ள நரிகள் இனமே அழிவின் விளிம்புக்கு தள்ளப்படுகிறது. இது தொடர்பாக, அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இதற்காக நாட்டிலேயே முதல் முறையாக, சேலத்தில் குள்ள நரிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறு விலங்குகள் பாதுகாப்பில், இது முக்கியமான முன்னேற்றமாக அமைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு


வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி கூறியதாவது:

சேலத்தில் குள்ள நரி பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக, சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று எறும்புத்தின்னி, முள் எலி உள்ளிட்ட, எட்டு வகை சிறு விலங்குகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை முழுமையான செயல்பாட்டுக்கு வரும்போது, உள்ளூர் அளவில், குள்ள நரி உள்ளிட்ட சிறு விலங்குகள் பாதுகாப்பது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us