தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/முதுகெலும்பை உடைக்கும் பேச்சு: ஸ்டாலின் தனது கட்சியினரை கண்டிக்க வேண்டும்

முதுகெலும்பை உடைக்கும் பேச்சு: ஸ்டாலின் தனது கட்சியினரை கண்டிக்க வேண்டும்

முதுகெலும்பை உடைக்கும் பேச்சு: ஸ்டாலின் தனது கட்சியினரை கண்டிக்க வேண்டும்

12


ADDED : ஜூலை 23, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 05:52 AM

12


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக முதல்வர் விஜய் முதுகெலும்பை உடைப்பேன் என, விளாத்திக்குளம் தி.மு.க., எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன் பொது வெளியில் பேசியதால், கைது செய்யப்பட்டுள்ளார். இதை தி.மு.க., கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.பி., கனிமொழி கண்டித்துள்ளனர். இது குறித்து கோவை மக்கள் என்ன நினைக்கின்றனர்?

முதல்வர் நமது பொக்கிஷம்


விஜய் தமிழகத்தின் முதல்வர். அவருக்கான மரியாதையை கொடுக்க வேண்டும். இது போன்ற முதல்வர் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம். அவரை இது போன்று அவதுாறாக விமர்சிக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களால் வாதிடலாம். ஆனால் முதுகெலும்பை உடைப்பதாக அக்கிரம பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.

-தேவராஜ், காந்திபார்க்

பேச்சை திரும்பபெற முடியாது


முதல்வர் பொறுப்பில் இன்று விஜய் இருக்கிறார். நாளை ஸ்டாலின் வரலாம். யார் பொறுப்பில் இருந்தாலும் வெறுப்பு பேச்சை அனுமதிக்க முடியாது. தமிழக முதல்வர் மக்களின் மனதுக்கு பிடித்தவராக இருக்கிறார். அருவறுக்கத்தக்க வகையில் பேசியவருக்கு அவப்பெயர்தான். பேசுவதற்கு முன்பு யோசித்து பேச வேண்டும்.

-ரவி, முத்தண்ணன்குளம் சாலை

விமர்சிக்க உரிமை உண்டு


அரசியலமைப்பு சட்டப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. குறைகளை நிவர்த்தி செய்யலாம் அல்லது அதற்கு உரிய பதில் அளிக்கலாமே தவிர, பேசியவர் மீது கைது நடவடிக்கை எடுப்பது தவறானது. கைது நடவடிக்கைக்கு எதிராக விமர்சிக்க கட்சி தலைவர்களுக்கும் உரிமை உள்ளது.

-ரவிச்சந்திரன், வடவள்ளி

பேசியது தவறு


முதல்வரின் எலும்பை உடைப்பேன் என எம்.எல்.ஏ., பேசியதே தவறு. மேடையில் எது வேண்டுமானாலும் பேசிவிடலாமா? அவரை கைது செய்ததில் தவறில்லை. இவரை போன்றவர்களுக்கு அரசியல் நாகரீகம் கற்றுத்தர வேண்டிய ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு வருகின்றனர். நல்ல வேளை, தி.மு.க.ஆட்சிக்கு வரவில்லை.

-குணசுந்தரி, சிங்காநல்லுார்

கவலைக்குரியது


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இப்படி மிரட்டும் தொனியில் பேசியது கவலைக்குரியது. இவரை போன்ற எம்.எல்.ஏ.,களுக்கு அதிகாரம் கூடியிருந்தால் நாட்டின் நிலைமை எப்படி இருக்கும். இவரை போன்றோரை கண்டிக்க வேண்டிய ஸ்டாலின், கனிமொழி இருவரும் அரசை விமர்சிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தி.மு.க., இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது.

-கண்ணன், மலுமிச்சம்பட்டி

மரியாதை கொடுக்க வேண்டும்


எந்த கட்சியாக இருந்தாலும் இதுபோன்ற பேச்சுக்கள் தவிர்க்கப்பட வேண்டும். முதல்வர், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். அதிலும் ஒரு எம்.எல்.ஏ., இதுபோன்று பேசுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. அரசியல் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

--பாலசுப்பிரமணியம், ராமநாதபுரம்

கண்டனத்துக்குரிய பேச்சு


எம்.எல்.ஏ., பேச்சு கண்டனத்திற்கு உரியது. எலும்பை உடைத்துவிடுவேன் என்பது என்ன பேச்சு; முதலில் சட்டசபையில் முழுமையாக வெளியேறாமல் முதல்வரின் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லட்டும். எம்.எல்.ஏ.வுக்கு வக்காலத்து வாங்குபவர்கள், முதல்வருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு கிடைக்காதா என காத்திருப்பவர்கள்.

-குமரபாண்டியன், ஈச்சனாரி

அரசியல் நாகரிகமில்லை


முதல்வரை மிரட்டும் தொனியில் 'எலும்புகள் முறிக்கப்படும்' என்று தி.முக., எம்.எல்.ஏ., பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். மார்க்கண்டேயனை கைது செய்து ரிமாண்ட் செய்தது சரிதான். ஸ்டாலின் தன் கட்சி எம்.எல்.ஏ.,வின் பேச்சை கண்டிக்காமல், அவரை கைது செய்ததுக்கு கண்டனம் தெரிவித்து இருப்பது, அரசியல் நாகரிகமில்லை.

-வடிவேல், சுந்தராபுரம்-

வக்காலத்து வாங்கக்கூடாது


முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரை ஸ்டாலினை அரசியல் அடிப்படையில் விமர்சனம் செய்த போது கண்டனம் தெரிவித்தனர் தி.மு.க.,வினர். இப்போது அவர்கள் கட்சி எம்.எல்.ஏ., முதல்வரை அநாகரிகமாக பொது இடத்தில் பேசி இருக்கிறார். இதையே த.வெ.க., எம்.எல்.ஏ.,பேசி இருந்தால் சும்மா இருப்பார்களா ? ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். வக்காலத்து வாங்கக்கூடாது.

- ரங்கசாமி, சூலுார்

தவறை கண்டிக்க வேண்டும்


முதலமைச்சர் எலும்பை உடைப்பேன் என மிரட்டும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோல பேசியவர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சரியானதே. அதேபோல், கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதை விட, தங்கள் கட்சியினர் தவறாக, அநாகரிகமாக பேசியிருந்தால் அதையும் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்.

- அஜித்குமார், மலுமிச்சம்பட்டி.

தெரியாமல் தவிக்கின்றனர்


அரசியல் களம் தற்போது மாறி வருகிறது. அநாகரிக அரசியலை தவிர்க்க வேண்டும். த.வெ.க. அரசு பொறுப்பேற்றது முதல் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி வருகிறது. அதனால், நீண்ட காலமாக ஆட்சி செய்த கட்சித் தலைவர்களுக்கு எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- கார்த்திகேயன், சவுரிபாளையம்

மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி


தி.மு.க., அ.தி.மு.க., இரண்டும் குடும்ப அரசியல் நடத்தியவர்கள்; பெரியளவில் நடைமுறை மாற்றங்களைக் கண்டதில்லை. மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் விஜய் தலைமையிலான ஆட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆட்சி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. லஞ்சத்திற்கு எதிரான முன்னெடுப்புகளைப் பிற கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

-லோகீஸ்வரன், புலியகுளம்

கண்டித்திருக்க வேண்டும்


ஒரு எம்.எல்.ஏ., மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், தி.மு.க., எம்.எல்.ஏ., முதல்வரின் எலும்பை உடைப்பதாக கூறியதை, அந்த கட்சி தலைவரே, அவர் பேசியது தவறு என்று கூறாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். தவறு செய்தவர் சொந்த கட்சிக்காரராக இருந்தால், முதலில் அவரைத்தான் ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.

--சாந்தி, வேடபட்டி

அரசியல் செய்கின்றனர்


தி.மு.க., ஆட்சியில், ஆட்சியை பற்றி விமர்சித்த பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வந்தன. ஆனால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ., முதல்வரை எலும்பை முறிப்பேன் என கூறியது தவறில்லை என்ற எண்ணம் கொண்டுள்ளார்கள். அரசின் மீது குறை சொல்ல எந்த காரணமும் இல்லை என்பதற்காக இதை அரசியல் செய்கின்றனர்.

-மரியாள், குரும்பபாளையம்

நாவை அடக்க வேண்டு


ம் முதல்வரை அச்சுறுத்தும் வகையில், இப்படி பேசக்கூடாது. வன்மையாக கண்டிக்க வேண்டும். இது போன்ற செயல்கள், சில நேரங்களில் எதிர்ப்பு சக்திகளாக மாறி, கலவரத்தை தூண்டி விடும். வருங்காலங்களில் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் தனது கட்சியினர் நாவை அடக்க வேண்டும்.

-சதீஸ்குமார், மேட்டுப்பாளையம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us