சிருங்கேரி சங்கராச்சாரியார் வரும் 28ல் சென்னை விஜயம்
சிருங்கேரி சங்கராச்சாரியார் வரும் 28ல் சென்னை விஜயம்
ADDED : அக் 20, 2024 02:37 AM

ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட, சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள், சென்னையில், 14 நாட்கள் முகாமிட உள்ளார்.
சென்னை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 28ம் தேதி மாலை, காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு வருகிறார்.
நவம்பர், 13ம் தேதி வரை சென்னையில் தங்கி பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின் திருப்பதி செல்கிறார்.
சிருங்கேரி மடத்தின் கிளை மடங்கள் அமைந்திருக்கும், சென்னை தி.நகர் பாரதி வித்யாஸ்ரமம், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லுாரி மற்றும் நங்கநல்லுாரில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் ஆலயம் போன்ற இடங்களில் கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கிறார். இதுதவிர அடையார், நங்கநல்லுார், மயிலாப்பூர், மேற்குமாம்பலம் போன்ற இடங்களில் அருளுரையும் நிகழ்த்த உள்ளார்.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில், உட்லேண்ட் ஓட்டல் அருகே உள்ள சுதர்மா இல்லத்திலும், தி.நகர் பாரதி வித்யாஸ்ரமத்திலும் தங்க உள்ளார்.
இவரது வருகையை ஒட்டி உலக நன்மை மற்றும் அமைதிக்காக சகஸ்ர சண்டி ேஹாமம் மற்றும் சமுதாய நலப்பணி திட்ட உதவி வழங்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சன்னியாச ஆஸ்ரமத்தை ஏற்ற பின், இவர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை.
இவரின் வருகைக்கான ஏற்பாடுகளை மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.ஏ.முரளி தலைமையில், பாரதி வித்யாஸ்ரமத்தின் சேர்மன் ஏ.கிருஷ்ணமூர்த்தி, செயலர் ஜெ.எஸ். பத்மநாபன், மேற்கு மாம்பல கிளை செயலர் வித்யா சங்கர கிருஷ்ணன், கல்வியாளர் ஸ்ரீகாந்த் நரசிம்மன் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்
- நமது நிருபர் - .