தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/கருணாநிதியின் அறிவுக்கூர்மை ஸ்டாலினிடம் இல்லை..: அந்துமணி பதில்கள்

கருணாநிதியின் அறிவுக்கூர்மை ஸ்டாலினிடம் இல்லை..: அந்துமணி பதில்கள்

கருணாநிதியின் அறிவுக்கூர்மை ஸ்டாலினிடம் இல்லை..: அந்துமணி பதில்கள்

10


ADDED : அக் 15, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

10

ADDED : அக் 15, 2026 05:27 AM


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ.மரியம்பேகம், மயிலாடுதுறை:

நோபல் பரிசு அந்தஸ்து தமிழுக்கு எப்போது கிடைக்கும்?



'தமிழகத்தில் என் வேலை முடிந்து விட்டது; வரும் நாட்களில் அமெரிக்காவில் வேலை உள்ளது' என்றெல்லாம் கவிஞர் வைரமுத்து அடி போடுகிறார். வெயிட் அண்ட் ஸீ... மரியம்!

அ.குணசேகரன், புவனகிரி:

பிரதமர் மோடியை காலை விமான நிலையம் சென்று நேரில் வரவேற்ற முதல்வர் விஜய், மாலை 5:00 மணிக்கு விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்துள்ளது குறித்து?



பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுடன் விஜய், சுமுக உறவை கடைப்பிடிக்கிறார் என்றும், இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய திட்டங்கள், சுணக்கம் இல்லாமல் வரும் என்றும் தோன்றுகிறது.

பி.பொன்விழி, அன்னுார்:

தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், எத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்! ஆனால், கட்சியினர் அவரிடம் உண்மையை பேசுகின்றனரா, பொய் பேசுகின்றனரா என்று கண்டறியாமல், வெள்ளந்தியாக இருக்கிறாரே?



அவரது தந்தை கருணாநிதியின் அறிவுக்கூர்மையும் அவரிடம் இல்லை; எதையும் கற்றுக் கொள்ளும் சூட்சுமமும் இல்லை என்றே தோன்றுகிறது.

சே.கணேஷ், பெரியகுளம்:

தமிழகத்தின் நதிநீர் தேவையை நிறைவேற்ற, அண்டை மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவது மட்டுமே போதுமா? நீண்ட கால தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும்?



மத்திய நதிநீர் மேலாண்மை வாரியம் இன்னும் வலுப்பெற வேண்டும். தமிழகத்தில், மேலும் பல தடுப்பணைகள் கட்டி, நதிநீர் மற்றும் மழை நீரை சேமிக்கும் வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும்.

ஆ.வண்ணை கணேசன், சென்னை:

தீய சக்தி, தீர்ந்து போன சக்தி - இரண்டிற்கும் என்ன வேறுபாடு?



முதல்வர் விஜய் மொழியில், தீய சக்தி - தி.மு.க., தீர்ந்து போன சக்தி - அ.தி.மு.க.,

ஜெ.ரவிக்குமார், திருப்பூர்:

முதல்வர் விஜய், தி.மு.க.,வினரைத் திட்டுவதை விட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாமே...



தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும், தோண்டத் தோண்ட ஊழல் பூதம் கிளம்புவதால், விஜய் இப்படிக் கோபப்படுகிறார். அவரவர் துறையை சீர்படுத்தி, நிர்வாக நடைமுறையே அறியாத அமைச்சர்களுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து, வழிநடத்த வேண்டியது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொறுப்பு!

இவற்றையெல்லாம் தாண்டி, நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இல்லாமல், விஜய் பாதுகாக்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us