ADDED : டிச 21, 2024 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் திரட்டியுள்ள நிதியில், சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்கு தள்ளியுள்ளது.
இதுகுறித்து சந்தை புலனாய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டில் இதுவரை இந்தியாவின் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள், கிட்டத்தட்ட 96,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. இது, கடந்த ஆண்டில் திரட்டப்பட்ட 90,000 கோடியை விட 6 சதவீதம் அதிகம்.
உலக அளவில் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் இந்த ஆண்டில் திரட்டிய நிதியில், அமெரிக்கா, பிரிட்டனுக்குப் பிறகு, இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. சீனா, ஜெர்மனி நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளி முன்னேறிஉள்ளது.
புத்தாக்க நிறுவனங்கள் திரட்டியுள்ள நிதியில், வெஞ்சர் கேப்பிடல் எனப்படும் துணிகர முதலீடு நிறுவனங்களின் பங்கு அதிகம்.

