அவசரகால அதிகாரங்களை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு அனுமதி
அவசரகால அதிகாரங்களை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு அனுமதி
UPDATED : மே 10, 2025 07:23 PM
ADDED : மே 10, 2025 03:41 AM

புதுடில்லி: போர் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செயல்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், சிவில் பாதுகாப்பு விதிகளின் (1968) கீழ், அவசரகால அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது.
சிவில் பாதுகாப்பு விதிகள் என்ன...
தீ தடுப்பு கட்டுப்பாடு
தீ விபத்துகளை தடுப்பது, தீயணைப்பு பயிற்சி, தீ தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துதல்.
உட்கட்டமைப்பை பாதுகாப்பது
கட்டடங்கள், உட்கட்டமைப்புகளை வான்வெளி இலக்குகளில் இருந்து மறைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்.
ஆபத்தான பொருள்
ஆபத்து விளைவிக்கும் உபகரணங்களை சேமித்தல், கையாளுதல், அகற்றுதல் மற்றும் ஆபத்தான இடங்களில் இருந்து மக்கள், சொத்துக்களை பாதுகாத்தல்.
தங்கும் வசதி
ஆபத்தான சூழலால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் தங்குவதற்கு தற்காலிக கூடாரங்களை ஏற்படுத்துதல்.
தாக்குதலில் சேதமடைந்த கட்டட இடிபாடுகள், பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல்
போக்குவரத்து, தொலைத்தொடர்பு
போக்குவரத்து, கப்பல்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை வரைமுறைப்படுத்துதல்.
தகவல் கட்டுப்பாடு
மக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்களை வெளியிடுவதை தடுப்பதற்கான விதிமுறைகள்.
மக்கள் பாதுகாப்பு படை
தன்னார்வ முறையில் மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்குதல், அதை செயல்படுத்துதல், அதற்கான விதிகளை உருவாக்குதல். இவர்களுக்கான தகுதிகளான குடியுரிமை, வயது, கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை நிர்ணயித்தல்.
கடமை, பொறுப்பு
தன்னார்வ மக்கள் படைக்கான கடமை, பொறுப்புகளை விளக்குதல், ஆயுதங்களை மீண்டும் ஒப்படைத்தல், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு பெறுவதற்கான நடைமுறைகளை உருவாக்குதல்.
நிதி
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியை பயன்படுத்தலாம்.
போர் நிறுத்தம்
இதற்கிடையே,
இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்
செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள்
பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.