தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/துரை எம்.பி., பேச்சால் கடும் அதிருப்தி; ஈரோடு ம.தி.மு.க.,வினர் ராஜினாமா

துரை எம்.பி., பேச்சால் கடும் அதிருப்தி; ஈரோடு ம.தி.மு.க.,வினர் ராஜினாமா

துரை எம்.பி., பேச்சால் கடும் அதிருப்தி; ஈரோடு ம.தி.மு.க.,வினர் ராஜினாமா


UPDATED : மே 01, 2026 05:27 AM

ADDED : மே 01, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 05:27 AM ADDED : மே 01, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் உட்பட 12 பேருக்கு, தி.மு.க., கூட்டணியில் 'சீட்' வாங்கி தருவதாக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உறுதி அளித்திருந்தார். ஆனால், ம.தி.மு.க.,வுக்கு கூட்டணியில் நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்கும் என நம்பி, இலவு காத்த கிளிகளாக காத்திருந்த ம.தி.மு.க.,நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதிருப்தியுற்ற மாநில இளைஞரணி செயலர் ஆசைத்தம்பி ம.தி.மு.க.,விலிருந்து விலகி, சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.

தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலர் கழக குமார் தலைமையில் ஆறு பகுதி செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ம.தி.மு.க.,விலிருந்து விலகினர்.

தேர்தலுக்கு முன் ஈரோட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துரை, 'சீட் கொடுப்பது கட்சி போடும் பிச்சை; கட்சியினர் சரியாக செயல்படாவிட்டால் சவுக்கை சுழற்றுவேன்' என்று, கட்சியினரை கோபப்படுத்தும் ரீதியில் பேசியுள்ளார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ம.தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலர் சோமசுந்தரம், கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலர் கோபால், அவைத்தலைவர் கந்தசாமி, பொருளாளர் சந்திரசேகர், மாவட்ட துணை செயலர்கள் லோகநாதன், நல்லசிவம், துளசிமணி, வீரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆகியோர், தங்கள் கட்சி பதவியை ராஜினாமா செய்தனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கை: 'தேர்தல் அரசியலில் கட்சியின் சார்பாக கிடைக்கும் பொறுப்புகள், கவுரவமான அடையாளம் அல்ல; அது கட்சியால் கொடுக்கப்படும் பிச்சை; கட்சியினர் மீது சவுக்கு எடுத்து சுழற்றுவேன்' என்பன போன்ற 'கார்ப்பரேட் அரசியல்' வார்த்தைகள், ம.தி.மு.க.,வில் நாங்கள் கனவிலும் நினைத்து பார்க்காதவை.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், உளமார்ந்து உண்மைக்கு உட்பட்டு தேர்தல் பணிகளை செய்தோம். சுயமரியாதையை சீண்டி பார்க்கும் 'பிச்சை' என்ற வார்த்தையை துரை பேசியது தவறு என்பதை உணர்த்தும் வகையில், கட்சி பதவிகளில் இருந்து எங்களை நாங்கள் விடுவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us