தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ஐபிஎஸ் அதிகாரி அருண் மன்னிப்பு கேட்பு; கண்டனங்களை நீக்கியது உச்ச நீதிமன்றம்

ஐபிஎஸ் அதிகாரி அருண் மன்னிப்பு கேட்பு; கண்டனங்களை நீக்கியது உச்ச நீதிமன்றம்

ஐபிஎஸ் அதிகாரி அருண் மன்னிப்பு கேட்பு; கண்டனங்களை நீக்கியது உச்ச நீதிமன்றம்

30


UPDATED : நவ 04, 2026 10:31 AM

ADDED : நவ 04, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

30

UPDATED : நவ 04, 2026 10:31 AM ADDED : நவ 04, 2026 05:16 AM


30
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சிறப்பு நிருபர் -

கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்ட விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக பதிவு செய்த கடுமையான கண்டனங்களை உச்ச நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொளத்துாரில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவின் சகோதரரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான இடம் உள்ளது.

ஒப்பந்தம்



இங்கு, 234 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டி அதில் 78 வீடுகளை அவர்களுக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், 78 வீடுகளில் 48 வீடுகளை போலி ஆவணங்கள் மூலம் விற்று 42 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பூர்ணஜோதி புகார் அளித்தார். மேலும், 1.38 கோடி ரூபாய் செலுத்தி ஏமாந்த ரவி என்பவரும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார்களின் அடிப்படையில், 2025 ஆகஸ்ட் 29ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சந்தோஷ் சர்மா மற்றும் அவரது மனைவி கல்பனா சர்மா கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அன்றைய சென்னை போலீஸ் கமிஷனரான ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் உத்தரவிட்டார்.

குண்டர் சட்ட உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அருணுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. இந்த கண்டனங்களை நீக்கக் கோரி ஐ.பி.எஸ்., அதிகாரி அருண், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் நேரில் ஆஜராகி, குண்டர் சட்ட உத்தரவு பிறப்பித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

மாற்றமில்லை



வழக்கின் விசாரணையை முடித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் முக்கியத்துவத்தையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். சட்ட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். குண்டர் சட்டம் போன்ற தடுப்புக் காவல் அதிகாரங்களை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். ஒருவரது சுதந்திரத்தை பாதிக்கும் விவகாரத்தில் அதிகாரத்தை பயன்படுத்திவிட்டு, பின்னர் மன்னிப்பு கேட்பது மாற்றாகிவிடாது.

எனினும், ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பையும், எதிர்காலத்தில் கவனமாக செயல்படுவதாக அளித்துள்ள உறுதிமொழியையும் ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு எதிராக பதிவு செய்த கண்டனங்கள் மட்டும் நீக்கப்படுகின்றன. அதேவேளையில், கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை; அது செல்லுபடியாகும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us