sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்; பொதுச்செயலர் சந்தோஷ் அறிவுறுத்தல்

/

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்; பொதுச்செயலர் சந்தோஷ் அறிவுறுத்தல்

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்; பொதுச்செயலர் சந்தோஷ் அறிவுறுத்தல்

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்; பொதுச்செயலர் சந்தோஷ் அறிவுறுத்தல்

12


ADDED : செப் 17, 2025 04:38 AM

Google News

12

ADDED : செப் 17, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி விவகாரங்களை, மேலிடத் தலைவர்கள் பார்த்து கொள்வர்; தமிழகத்திற்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை, மத்திய அரசு வழங்கியுள்ளது; ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பால், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும்.

''இவற்றை ஒவ்வொரு வீட்டிற்கும், தமிழக பா.ஜ.,வினர் எடுத்து செல்ல வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ், தமிழக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளில், முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக பா.ஜ.,வின், 'சிந்தனை அமர்வு' கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம், அக்கரையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு, கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தலைமை வகித்தார். இதில், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சட்ட சபை தேர்தலுக்கு தயாராவது; மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது, தி.மு.க.,வின் பிரசாரத்தை முறியடிப்பது, தி.மு.க.,வை தோற்கடிப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் தலைவர்கள் பேசியது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:


நாகேந்திரன்: தமிழகத்தை தி.மு.க., தலைகுனிய வைத்துள்ளது. தி.மு.க., ஆட்சியை அகற்ற, கூட்டணி கட்சிகளுடன், பா.ஜ.,வினர் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அண்ணாமலை: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் பா.ஜ.,வினரும் பங்கேற்கின்றனர். அவரின் பிரசாரத்திற்கு நல்ல கூட்டம் கூடுகிறது.

சென்னையில் நடந்த கூட்டத்தில், பழனிசாமி பேசும்போது, 'நான்கு ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியை பா.ஜ., காப்பாற்றியது' என, பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

சந்தோஷ்: தேர்தல் பணிகளை 'பூத் கமிட்டியில்' இருந்து, அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை, மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும். இவற்றை ஒவ்வொரு வீடு வீடாக சென்று, மக்களிடம் கூற வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி விவகாரங்களை மேலிட தலைவர்கள் பார்த்துக் கொள்வர். அதில் கட்சியினர் கவனம் செ லுத்த வேண்டாம். இவ்வாறு, அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகளில் பலர், 'கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரனை இணைக்க வேண்டும்; புதிய கட்சிகளை சேர்க்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர். ஒரு நிர்வாகி, 'விஜய்க்கு கூட்டம் அதிகம் வருகிறது.

'இது, தி.மு.க., மட்டுமின்றி, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஓட்டுக்களை பாதிக்கும்' எனப் பேச, நடிகர் சரத்குமார் குறுக்கிட்டு, 'கூட்டம் கூடுவது எல்லாம் ஓட்டுகளாக மாறாது' என தெரிவித்ததாக, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

சந்தோஷ் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கட்சியின் மூத்த தலைவர்களான நாகேந்திரன், எச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமாதானமான அண்ணாமலை சமீப காலமாக, கட்சியின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தவிர்த்து வந்தார். நேற்றைய கூட்டத்திற்கும், அவர் வராமல் இருக்க திட்டமிட்டுள்ளதை, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தெரிந்து கொண்டார். இதையடுத்து, நேற்று காலை, 7:00 மணிக்கு, பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டிற்கு சென்றார். ஒரு மணி நேரம் வரை நீடித்த சந்திப்பின்போது, 'மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி, ஐந்து மாதங்களாகியும், கட்சியில் வேறு பதவிகள் வழங்கவில்லை. கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள சிலர், எனக்கு எதிராக செயல்படுகின்றனர். ஆதரவாளர்கள் வாயிலாக, சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்து கருத்துக்களை பதிவிடுகின்றனர்' என, அண்ணாமலை தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார். அதற்கு சந்தோஷ், 'மேலிடத் தலைவர்களிடம் பேசி உரிய தீர்வு காணப்படும்; கூட்டத்தில் பங்கேற்கவும்' என, கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று காலை கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலை, பிற்பகலில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.








      Dinamalar
      Follow us