சர்வ கட்சியினரும் சம்பந்தப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
சர்வ கட்சியினரும் சம்பந்தப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
ADDED : ஆக 08, 2024 07:00 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலரும், ரவுடி நாகேந்திரனின் மகனுமான அஸ்வத்தாமனை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை கைதான நபர்களில், வழக்கறிஞர் அருள், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். அவரது கூட்டாளி சதீஷ், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவரது தந்தை தி.மு.க.,வில், திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியாக உள்ளார்.
வழக்கறிஞர் ஹரிஹரன், த.மா.கா., மாணவர் அணி நிர்வாகியாகவும், ரவுடி அஞ்சலை, பா.ஜ.,வில் நிர்வாகியாகவும், செல்வராஜ் என்பவர், அக்கட்சி உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளனர்.
மேலும், ஹரிதரன், மலர்க்கொடி ஆகியோர், அ.தி.மு.க., நிர்வாகிகளாக இருந்தனர். தற்போது கைதான அஸ்வத்தாமன், தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி என்பதால், சர்வ கட்சியினரும் சம்பந்தப்பட்டதாக, இந்த வழக்கு மாறியிருக்கிறது.
அஸ்வத்தாமனுடன் சேர்த்து, இதுவரை 6 வழக்கறிஞர்கள் கைதாகி உள்ளனர். 'அனைத்து கட்சியை சேர்ந்தோரும் சதி திட்டம் தீட்டி, ஆம்ஸ்ட்ராங் கொலையை செய்துள்ளது வெளிப்பட்டுள்ளது' என போலீசார் தெரிவித்தனர்.