தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தி.மு.க., ஆட்சியில் குறைவான நாட்களே கூடிய சட்டசபை

 தி.மு.க., ஆட்சியில் குறைவான நாட்களே கூடிய சட்டசபை

 தி.மு.க., ஆட்சியில் குறைவான நாட்களே கூடிய சட்டசபை


ADDED : பிப் 23, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், சட்டசபை கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், சட்டசபை கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம், 100 நாட்கள் வரை சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்தமாக, 161 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. 30 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில், இதுவே குறைவு.

கடைசியாக, 1989 - 1991 வரை நடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் தான், மிக குறைவாக, 104 நாட்கள் சட்டசபை நடந்துள்ளது. 2011 - 2016 வரையிலான ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 191 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 162 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது. பழனிசாமி முதல்வராக இருந்த போது, 2020 மார்ச் 8 முதல் ஏப்ரல் 9 வரை சட்டசபை நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக, ஒன்பது நாட்களுக்கு முன்பாகவே கூட்டம் முடிக்கப்பட்டது. கொரோனா பரவல் இல்லாவிட்டால், கூடுதல் நாட்கள் சபை நடந்திருக்கும்.

தி.மு.க., ஆட்சியில் சபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கேள்வி நேரம், முதல்வர், அமைச்சர்கள் பதிலுரை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மட்டுமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க.,வினர் பங்கேற்ற விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. சட்டசபை இறுதி நாளான, கடந்த 20ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவர்கள், அரசையும், முதல்வரையும் புகழ்ந்து பேசியது மட்டும், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Image 1539753

பழனிசாமி பலமுறை 'ஆப்சென்ட்'


கடந்த 2021 மே முதல், கடந்த பிப்ரவரி 20 வரை, சட்டசபை நடந்த அனைத்து நாட்களிலும், சபைக்கு வந்தவர்களின் பட்டியலை, சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ளார். அதில், 18 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், 11வது எம்.எல்.ஏ.,வாக ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., சந்திரகுமார் பெயர் இடம் பெற்றுள்ளது.
இவர், 2025 பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம், பல நாட்கள் சபைக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டு விட்டு சென்றுள்ளார். இவரது பெயரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி, ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் சபைக்கு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில், பல நாட்கள் அவர் சபைக்கு வரவில்லை. முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் கூட, சில நாட்கள் வரவில்லை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us