ADDED : பிப் 18, 2024 02:49 AM

டில்லியின் எல்லை பகுதிகளில், பலவித கோரிக்கைகளை முன் வைத்து, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், அரசின் கஜானா காலியாகி விடும்' என்பது மத்திய அரசு மட்டுமன்றி, நிதி வல்லுனர்களின் கருத்தும் அதுதான்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னும் இப்படித்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இந்த முறையும் அதே போல சரியாக தேர்தலுக்கு முன் துவங்கியுள்ளது. இதற்கு பின், பஞ்சாபில் ஆட்சி நடத்தும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உள்ளது என்பது மத்திய அரசுக்கு தெரியும்.
மற்ற மாநில விவசாயிகள் இதில் பங்கேற்கவில்லை. கடந்த முறை போல இம்முறை இந்த போராட்டம் அந்த அளவிற்கு மிகப் பெரியது அல்ல என்பது பா.ஜ.,வின் கருத்து.
உத்தர பிரதேசம் உட்பட சில வட மாநில விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; இதனால் பா.ஜ.,வும், மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.