மண்டை பத்திரம் மக்களே! உடைந்து தொங்கிய அரசு பஸ் கதவு
மண்டை பத்திரம் மக்களே! உடைந்து தொங்கிய அரசு பஸ் கதவு
ADDED : மார் 10, 2025 09:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உடைந்து தொங்கிய கதவுடன் அரசு பஸ் இயக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசு போக்கு வரத்து கழக திருநெல்வேலி மண்டலத்தின் நாகர்கோவில் கிளையில் உள்ள அரசு பஸ், நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் தானியங்கி பின் கதவு பஸ்ஸிலிருந்து பெயர்ந்து வெளியே தொங்கிய நிலையில் இருந்தது. இதை கவனிக்காத டிரைவர் தொடர்ந்து பஸ்ஸை இயக்கினார்.
சில இடங்களில் டூவீலர்கள் மீதும், மேலும் சில இடங்களில் பாதசாரிகள் மீதும் மோதுவது போல் பஸ் சென்றது. இதை வீடியோ எடுத்த சிலர் வைரலாக்கினர். போதுமான பராமரிப்பு இல்லாததுதான் அரசு பஸ்களில் இது போன்ற நிலை ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.