"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
UPDATED : மே 13, 2025 01:05 PM
ADDED : மே 13, 2025 10:11 AM

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் பதட்டத்தில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைக்கு ஜூம்மா மசூதி இமாம் பேரன் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் ' நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்; பிரதமருக்கு நன்றி ' என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பாக்., பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் அதிரடியாக பதிலடி அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னர் இரு நாட்டு தரப்பிலும் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடந்தது. தொடர்ந்து போர் மூளும் சூழல் உருவானது. ஆனால் அமைதிப்பேச்சின் மூலம் தற்காலிகமாக இந்தியா தாக்குதலை நிறுத்தி உள்ளது.
இது தொடர்பாக டில்லி ஜூம்மா மஜித் ஷாகீ இமாம் சையீது அரீப் புகாரி பேரன் அஹம்மது புகாரி, மஜித்அருகே அமர்ந்தவாறு ஒரு வீடியோவை சமூகவலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
' இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்பட்டதால் நான் அச்சத்தில் உறைந்து போய் இருந்தேன். இது எனது மனதை பெரும் பாதித்தது. மதிப்பிற்குரிய அங்கிள் பயங்கரவாதத்திற்கு எதிராக தாங்கள் எடுத்த கடும் நடவடிக்கைக்கு மிக்க நன்றி! உங்கள் நடவடிக்கையில் வெளிப்பட்டது. ' நீங்கள் எங்களின் ஹீரோ ' ,.
அரசுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் மிக்க நன்றி ! நான் தற்போது எனது படிப்பில் கவனம் செலுத்த செல்கிறேன் நன்றி ஜெய்ஹிந்த் ! ' இவ்வாறு புகாரி கூறியுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.