ADDED : அக் 30, 2025 06:24 AM

தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி வந்திருக்கும் தலைவருக்கு, தமிழகத்தில் நடக்கும் ஜாதிய கொடுமைகள், நில உரிமை மீட்பு பிரச்னைகள் குறித்து எதுவும் தெரியாது. ஆனால், அவர் முதல்வர் ஆக ஆசைப்படுகிறார். அவர் போகும் இடமெல்லாம், எதற்காக கூடுகிறோம் என்றே தெரியாமல் ஒரு பெரிய கூட்டம், அவரது கூட்டங்களுக்கு வருகிறது.
வட மாநிலங்களில் தான், ஆன்மிக நிகழ்வுகளின் போது, மிதிபட்டு மனிதர்கள் இறப்பர். ஆனால், கரூரில் அப்படியொரு சம்பவம் நடந்திருப்பது வேதனை. தன் கூட்டத்துக்கு வந்து பலியானோருக்கு ஆறுதல் சொல்ல கரூருக்குத்தான் விஜய் சென்றிருக்க வேண்டும்.
கூட்டத்தில் சிக்கி, என் பிள்ளை இறந்தது குறித்து எனக்குக் கவலையில்ல; ஆனால், தலைவர் அழைத்ததால், சென்னைக்குச் சென்றேன் என்று சொல்வது, தமிழர்கள் மனநிலை கெட்டுப் போயிருப்பதையே காட்டுகிறது.
- பாலகிருஷ்ணன்
முன்னாள் மாநில செயலர், மா.கம்யூ.,

