பயங்கரவாதத்தை துாண்டிய நபரை கைது செய்யவில்லை: விளக்கம் அளித்த நபர் மீது வழக்கு பதிந்து தொந்தரவு
பயங்கரவாதத்தை துாண்டிய நபரை கைது செய்யவில்லை: விளக்கம் அளித்த நபர் மீது வழக்கு பதிந்து தொந்தரவு
ADDED : ஆக 25, 2025 02:15 AM

சென்னை: 'இந்தியாவின் மீது படையெடுக்கும் முஸ்லிம்களை, நரகத்திற்கு செல்லாமல் அல்லா காப்பார்' என, இந்திய இறையாண்மைக்கு எதிராக, தேச விரோத கருத்து களை பரப்பி, பயங்கரவாத செயலை துாண்டும் விதமாக உஸ்தாத் பீர் முகமது சதக்கி அஷ் அரி பேசினார்.
அவரை கைது செய்யாமல், உஸ்தாத் பேச்சுக்கு பதில் அளித்த, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் பால கவுதமன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் உஸ்தாத் பீர் முகமது சதக்கி அஷ் அரி சமீபத்தில், 'வீடியோ' ஒன்றில் பேசியிருந்தார்.
அதில் முகமது நபிகளின் சொல், செயல், தீர்ப்புகள் மற்றும் நடைமுறைகள் அடங்கிய பிரசாரமே ஹதீஸ். அதில், இந்தியாவின் மீது படையெடுப்போரை, நரகத்திற்கு செல்லாமல் அல்லா காப்பார் என, குறிப்பிட்டுள்ளது.
மன்னராட்சி
இந்த ஹதீசை, இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. முகமது கோரி, அவுரங்க சீப் மற்றும் முகலாயர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், ஒருவரும் ஹதீசை பின்பற்றி முஸ்லிம் நாடாக்கவில்லை. அவர்கள் கடைசி வரை மன்னராட்சி நிர்வாகத்தையே நடத்தினர்.
போர்ச்சுகீசியர்கள் இந்தியா வந்து சென்ற பின், பிரிட்டீஷார், இந்தியாவை ஆட்சி செய்த அற்புதமான காலத்திலேயே, இமாம் என அழைக்கப்படும், முஸ்லிம் மதத் தலைவர், மிகச் சரியாக கணித்துள்ளார்.
அவரது ஹதீசில், 'பிரிட்டீஷார் ஆட்சிக்கு பின், இந்தியாவின் ஆட்சி அதிகாரம், ஹிந்து மதத்தில் உள்ள பாசிசவாதிகளின் கரங்களுக்கு சென்று விடும். பிரிட்டாஷாரும், ஹிந்துக்களும் சேர்ந்து, எப்படி முகலாயர் உள்ளிட்ட முஸ்லிம் ஆட்சிகளை, கடந்த காலங்களில் தகர்த்தனரோ, அதுபோல, ஹிந்துக்கள் கரங்களில் இருக்கும் பாசிச ஆட்சி மீது, முஸ்லிம் சக்திகள் படையெடுக்கும்.
பின், இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றுவர். முஸ்லிம் ஆட்சி மலரும்' என, சொல்லப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதன் வழியே, அவர் வெளிப்படையாக சொல்ல வருவது, 'இந்தியா முஸ்லிம் நாடாக மாற வேண்டும்' என்பதே. அதற்கு, பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி தாக்குதல் நடத்துவோரை, நரகத்திற்கு செல்லாமல் அல்லா காப்பார் என்பதே.
இந்திய இறையாண்மைக்கு எதிராக, பயங்கரவாதத்தை துாண்டும் வகையில், தேச விரோத கருத்துகளை பரப்பி வரும், உஸ்தாத்தை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாமல், போலீசாரும், மத்திய, மாநில உளவு அமைப்பினரும் வேடிக்கை பார்க்கின்றனர்.
நியாயமல்ல
தன் வீடியோ பதிவில் பயங்கரவாதத்தை விதைத்திருக்கும் உஸ்தாத்தின் பேச்சுக்கு, எதிர் வினையாற்றும் விதமாக, 'ஸ்ரீ டிவி' என்ற, 'யு டியூப்' சேனலில் பேட்டி அளித்துள்ளார் பால கவுதமன். அவரின் பேட்டி, சமூக மோதலை துாண்டுவதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது நியாயமில்லாத செயல்.
பொதுமக்கள் தரப்பில் இருந்து, யாரும் புகார் அளிக்காத நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு எஸ்.ஐ., ஒருவரே புகார் அளித்து, அதன் மீது வழக்கு பதிவு செய்து இருப்பது, தமிழக அரசின் ஒருதலைபட்சமான செயல்பாடு; அடக்குமுறையின் உச்சம்.
தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத், சுன்னத் ஜமாத் ஸ்டூடண்ட் பெடரேஷன், சுன்னத் ஜமாத் பாலர் சங்கம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், தாவா யாத்திரை நடத்தப்பட்டு உள்ளது. அதில், உஸ்தாத் பங்கேற்றுள்ளார்.
'இப்படி நடத்தப்பட்ட யாத்திரை, மத மாற்ற யாத்திரை' எனவும் பால கவுதமன், தன்னுடைய பேட்டியில் கூறி உள்ளார்.
பயங்கரவாத எண்ணத்தோடு, இட்டுக்கட்டி சொல்லப்படும் விஷயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமல், அவ்வாறு சொல்லப்படும் அனைத்தும் கட்டுக்கதைகள் என விளக்கம் அளித்த பால கவுதமன் மீது நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.