ADDED : ஜூன் 22, 2025 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், சொன்னம்பட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
இந்தியாவில் அம்பேத்கரை வைத்துதான் அரசியல் நடக்கிறது. அவருக்கு எதிராக பேசுபவர்கள், அவரை ஆதரித்துப் பேசுபவர்கள் என, 2 அணிகள் மட்டுமே உள்ளன.
இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை, காங்., முன்னாள் தலைவர் ராகுல், எங்கு சென்றாலும் உயர்த்திப் பிடிக்கிறார். பா.ஜ.,வினர் அம்பேத்கருக்கு பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.
ஆனால், கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும், அந்த தெருவுக்கு தேர் வராது என சொல்கின்றனர். தமிழகத்தில், இனி வி.சி., கட்சியை தவிர்த்துவிட்டு, அரசியல் நகர்வு கிடையாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்காக நாம், பெரிய உழைப்பை கொடுத்து இருக்கிறோம். இவ்வாறு பேசினார்.