sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'ஜனநாயகன்' பட விவகாரத்தில் உள்நோக்கம் இல்லை; மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கோர்ட்டில் விளக்கம்

/

'ஜனநாயகன்' பட விவகாரத்தில் உள்நோக்கம் இல்லை; மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கோர்ட்டில் விளக்கம்

'ஜனநாயகன்' பட விவகாரத்தில் உள்நோக்கம் இல்லை; மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கோர்ட்டில் விளக்கம்

'ஜனநாயகன்' பட விவகாரத்தில் உள்நோக்கம் இல்லை; மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கோர்ட்டில் விளக்கம்

8


ADDED : ஜன 08, 2026 04:29 AM

Google News

ADDED : ஜன 08, 2026 04:29 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் விவகாரத்தில் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை' என, மத்ரதிய திரைப்பட சான்றிதழ் வாரியம், சென்னை உயர் நீதி மன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

'நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், நாளை தியேட்டர்களில் வெளியாகும்' என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.

தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக் ஷன்ஸ் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில், புகார் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதை பார்வையிட்ட நீதிபதி, ''படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கதா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது !

''படத்திற்கு சான்று வழங்க முடிவு செய்த பின், மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்?'' என தணிக்கை வாரியத்திற்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இ தற்கு பதில் அளித்து, தணிக்கை வாரியம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டதாவது:

படத்தில் பாதுகாப்பு படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அது குறித்து, பாதுகாப்பு படை நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

சான்றிதழ் வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ, மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது. அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளன.

படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனத்துக்கு, ஜன., 5ம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில், வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு, மத்திய அரசின் முடிவல்ல. இவ்வாறு அவர் வாதிட்டார்.

படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதாடியதாவது:

ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்து உள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் என, படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? இவ்வாறு அவர் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களை அடுத்து, வழக்கின் உத்தரவை தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். அப்போது, படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்தார். இதற்கிடையே, ஜனநாயகன் பட வெளியீடு தள்ளி வைக்கப் பட்டுள்ள தாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நேற்று இரவு தெரிவிக்கப் பட்டது.






      Dinamalar
      Follow us