sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பயங்கரவாதிகளுக்கு ஜாதி, மதம் கிடையாதாம் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்

/

பயங்கரவாதிகளுக்கு ஜாதி, மதம் கிடையாதாம் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்

பயங்கரவாதிகளுக்கு ஜாதி, மதம் கிடையாதாம் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்

பயங்கரவாதிகளுக்கு ஜாதி, மதம் கிடையாதாம் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்

21


ADDED : ஏப் 29, 2025 04:34 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 04:34 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. இங்குள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

தேச நலனுக்கு எதிராகவும், எதிரி நாட்டுக்கு ஆதரவாகவும் இவர்கள் குரல் கொடுத்து வருவது, மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் அரசியல் ஆதாயம் மற்றும் சொந்த பாதுகாப்பு நலனுக்காக இவர்கள் கோழைத்தனமாக, பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கி பேசி வருகின்றனர்.

பாகிஸ்தானின் 'ஹீரோ'


கர்நாடகா முதல்வர் சித்தராமையா சமீபத்தில் தெரிவித்த கருத்து, பாகிஸ்தான் மீடியாக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

''நான் போரை விரும்பவில்லை. இப்போது, பாகிஸ்தான் உடன் போருக்கான அவசியம் எதுவும் கிடையாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், மட்டுமே இது குறித்து யோசிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலில் உளவுத்துறையின் தோல்வி தெரிகிறது. பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளன,'' என்கிறார் சித்தராமையா. இவரது கருத்தும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கருத்தும் ஒரே போல் உள்ளன.

கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி. திம்மப்புர் கூறுகையில்,''பயங்கரவாதிகளுக்கு மதம், மொழி, ஜாதி கிடையாது. அவர்கள் மதத்தை பற்றி கேட்டு, தாக்குதல் நடத்த மாட்டார்கள். கார்கில், புல்வாமா, பஹல்காமில் பாதுகாப்பு தோல்வி ஏற்பட்டுள்ளது தான் பிரச்னைக்கு காரணம். அடையாள அட்டை சோதனை நடத்திவிட்டு, யாரும் சுட்டுக் கொல்லப்படவில்லை.வந்தார்கள், சுட்டார்கள், சென்றார்கள். நீங்கள் எந்த மரணத்தையும் அரசியலாக்க வேண்டாம்,'' என்கிறார்.

ஆனால், அங்கு நடந்தது என்ன என்பதை உலகமே அறிந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள், 'பயங்கரவாதிகள் சுற்றுலா பயணியரிடம் பெயரை கேட்டனர். ஹிந்து பெயராக இருந்ததால், உடனடியாக சுட்டுக்கொன்றனர். எங்களைக் கல்மா ஓதச் செய்தனர். சிலரைகொல்வதற்கு முன், அவர்களின் மத அடையாளத்தை சரிபார்க்க ஆடைகளைக் கழற்றினர்' என, கூறி வருகின்றனர்.

தியாகத்துக்கு அவமதிப்பு


கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், பயங்கரவாதிகள் தனது கணவனை கொன்றபின், என்னையும் கொன்று விடுங்கள் என மன்றாடினார். அப்போது, 'உன்னை கொல்ல மாட்டோம்; மோடியிடம் சென்று சொல்' என எகத்தாளத்துடன் பேசினர்.

பயங்கரவாதிகளின் செய்கையை சம்பவம் நடந்த உடனே, பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்த மீடியாக்களிடம் விலாவாரியாக விவரித்தனர்.

ஆனால், இதையெல்லாம் தெரிந்த கர்நாடகா முதல்வரும், அமைச்சரும், இவர்களின் கூற்றுக்களை உதாசனப்படுத்தி பேசுவது, வேதனைக்குரியது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மக்களை அவமதிக்கின்றனர்.

அமைச்சர் திம்மப்புர் பேச்சை கேட்டால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியர் தங்கள் உற்றார் உறவினரை இழந்தது மட்டுமின்றி, பொய்யும் பேசி விட்டனர் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் உயிருடனும், உணர்வுடனும் விளையாடும் இது போன்ற கொடூரமான நகைச்சுவை வேறு எதுவும் இருக்காது என பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கேள்விக்கு பதில்


காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு தருணங்களில் பேசியுள்ளார். ''பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு. அந்த நாட்டுடன் விளையாட வேண்டாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என, கடந்த மாதமே கூறியிருந்தார்.

தற்போது, பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடந்த பின், இன்னும் ஒரு படி மேல் போய், பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்தும் விதத்தில் சிலாகித்து பேசுகிறார்.

''இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்து விட்டது; அதற்குரிய விலையை நாம் இப்போது கொடுத்து வருகிறோம். பிரிவினையின்போது தீர்க்க முடியாத பல கேள்விகளுக்கான பதில்தான், இப்போதைய தாக்குதல்,'' என அவர் கூறுகிறார்.

உட்கார்ந்து பேசுங்க!


காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு எம்.பி.,யுமான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, பயங்கரவாதிகளின் செயல்களுக்கு பலமாக கைத்தட்டல் அளிப்பது போல் பேசுகிறார்.

''காஷ்மீரில் சுற்றுலா பயணியரிடம், மதம் கேட்டு தாக்குதல் நடத்தியதாக கூறுகின்றனர். இந்தியாவில் முஸ்லிம்கள் தாங்கள் பலவீனப்படுத்தப்படுவதாக உணர்கின்றனர். அதை பிரதமர் மோடிக்கு தெரிவிக்கவே, இது போன்ற தாக்குதல் நடக்கிறது,'' என அவர் புது விளக்கம் கூறுகிறார்.

காஷ்மீர் மாநில காங்., தலைவர் தாரிக் ஹமீது கர்ரா கூறுகையில், ''இப்போது, பாகிஸ்தானுடன் போருக்கு என்ன அவசியம் இருக்கிறது? இரு தரப்பினரும் மேஜை போட்டு உட்கார்ந்து பேசி, தீர்த்துக்கொள்ள வேண்டியதுதானே!'' என, நக்கல் தொனியில் பேசி உள்ளார்.

இவர்களின் பேச்சுக்களை கேட்டால் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், தீவிரவாதிகளின் தாக்குதலையும், காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்துவது போல் உள்ளது.

-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us