சிந்தனைக்களம்: பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்த பிரதமரின் கணக்கு
சிந்தனைக்களம்: பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்த பிரதமரின் கணக்கு
ADDED : ஆக 28, 2024 04:29 AM

அதிகாரம், பதவி, செல்வாக்கு, பொருட்செல்வம் என எதுவாக இருந்தாலும் சிலவற்றுக்காக நாம் ஆசைப்படும்போது, அவற்றை அடைவதற்குக் கடினமாக உழைக்கும்போது, நமக்கு கிடைக்கும் வெற்றியில் மட்டுமே நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதன்பிறகு மனநிம்மதி ஏற்படுகிறது. சாதிக்கப்பட்டது அளவுகோலாக மாறுகிறது. இது பெரும்பாலான பொதுமக்களுக்கான மனிதர்களுக்குப் பொருந்தும்.
கொள்கைகள் விஷயத்திலும் இதேபோன்ற அணுகுமுறையை நாம் மேற்கொள்கிறோம். நீண்டகால பிரச்னைக்குத் தீர்வு காண அரசு முயற்சி செய்யும்போது, இந்த மனத்தடை மேலும் அதிகரிக்கிறது. சாதனைக்கான அங்கீகாரம் போதிய அளவு இருப்பதில்லை. எதிர்நிலைச் சிந்தனை மாறுவதில்லை. தாழ்வான எண்ணம் நீடிக்கிறது. 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் பிரதமரின் 'ஜன்தன்' திட்டமும் இதுபோன்ற ஒன்றுதான்.
பெண் பயனாளிகள்
கோடிக்கணக்கான இந்தியர்கள் நிதி விலக்கலில் இருப்பதாக நீண்ட காலமாக நாம் கவலை கொண்டோம். 2014-ம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கோடிக்கணக்கான இந்தியர்களை முறைப்படியான நிதிமுறைக்குக் கொண்டு வருவதற்கான சவால்மிக்க லட்சியப்பணியை மேற்கொண்டது.
இது தற்போது பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 2024, ஆகஸ்ட் 14 நிலவரப்படி, 2.31 லட்சம் கோடி வைப்புத் தொகையுடன், 53.13 கோடி உள்ளனர். இவர்களில், 30 கோடி பேர் பெண் பயனாளிகள்.
கடந்த, 2008--ல், அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறை மற்றும் முறைப்படியான அடையாளம் காணுதலில் மிகவும் கீழாக இருந்த நிலையில், இதற்கு முந்தைய, 10 ஆண்டுகளில், இந்தியா சந்தித்த சவால்கள் மிகவும் ஆழமானவை.
வங்கிக் கணக்கு தரவுகள் மற்றும் தனிநபர் ஜி.டி.பி., அடிப்படையில், பாரம்பரியமான வளர்ச்சி நடைமுறையை மட்டும் இந்தியா சார்ந்திருக்குமானால், வயது வந்தவர்களில் 80 சதவீதம் பேர் வங்கிக் கணக்கைப் பெறுவதற்கு தோராயமாக 47 ஆண்டுகள் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது' என்று, சர்வதேச குடியமர்வுக்கான வங்கியின் ஆய்வாளர்கள், 'டிஜிட்டல் நிதிக்கட்டமைப்பு வடிவம்: இந்தியா தந்துள்ள பாடம்' என்று தலைப்பிடப்பட்ட ஆய்வறிக்கையில் (பிஐஎஸ் கட்டுரை எண் 106. டிசம்பர் 2019) குறிப்பிட்டு உள்ளனர்.
திருட்டு பயம் நிறைந்த பகுதிகளில், பிரதமரின் ஜன்தன் திட்ட கணக்குகளின் பயன்பாடு, பாதுகாப்பான நிதி சேமிப்புக்கு உதவி செய்துள்ளது. மிக அதிகமாக வட்டி வசூலிக்கும் முறைசாரா நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெறுவது குறைவதற்கும் இது வழிவகுத்துள்ளது என்று, 'வங்கி வசதி இல்லாதோருக்கு வங்கி வசதி: நிதி அணுகல் குறித்து 280 மில்லியன் புதிய வங்கிக் கணக்குகள் எதைக்காட்டுகின்றன?' என்ற செப்டம்பர் 2023 ஆய்வு ஒன்று கூறுகிறது.
பிரதமரின் ஜன் தன் கணக்குகளில் 2.31 லட்சம் கோடி வைப்புத்தொகை உள்ளது. இந்தக் கணக்குகளின் பயன்பாடு 'கொவிட்' பெருந்தொற்றுக் காலத்தில் மதிப்பிட முடியாததாக இருந்தது நிரூபணமானது. மத்திய அரசு இந்தக் கணக்குகளில் பணப்பயன்களை நேரடியாகப் பரிமாற்றம் செய்தது.
நிதியாண்டு 2020 முதல் நிதியாண்டு 2022 வரையிலான மூன்று ஆண்டுகளில், 8.1 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் பணம் செலுத்தும் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி என்பது, பெருந்தொற்றின் உச்ச காலத்தில் நேரடி பணப் பரிமாற்றம் இல்லாத நிலைக்கு வசதியாக அமைந்தது. வாடிக்கையாளர் அனுமதியுடன் எந்த ஒரு நிதி நிறுவனத்திற்கும் தரவு பகிர்வு வசதியை, பிரதமரின் ஜன்தன் வங்கித்திட்டம் செய்து கொடுத்ததை, இந்த மாதத்திய மற்றொரு ஆய்வு காட்டுகிறது.
மகளிரின் சொந்த கணக்குகளில் பணம் என்பதால், பிரதமரின் இந்த ஜன்தன் திட்டம் அவர்களுக்கு அதிகாரம் அளித்து உள்ளது. இந்த நிதி சுதந்திரம் அளவிடற்கரியது; ஆனால், மிக முக்கியமானது.
சுயவேலைவாய்ப்பு
இந்திய பெண்கள், இயற்கையாகவே அதிகபட்ச சேமிப்பு மனநிலை கொண்டவர்கள்; அதிக உழைப்பாளிகள். இதன் காரணமாக, குடும்பங்களுக்கு நிதிப்பாதுகாப்பு அதிகரித்திருப்பது மட்டுமின்றி, தேசிய சேமிப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
மேலும் இது, நாட்டில் பெண் தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கிறது. பெண்களிடையேயும் எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தினரிடையேயும், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் 'ஸ்டார்ட் அப்' இந்தியாவில் மகளிர் பங்களிப்பு எழுச்சியை ஊக்கப்படுத்துகிறது. 2024, மே மாத நிலவரப்படி, பிரதமரின் 'முத்ரா' திட்டத்தின் கீழ், 68 சதவீத கடன் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
'ஸ்டேண்ட் அப் இந்தியா' திட்டப் பயனாளிகளில் 77.7 சதவீதம் பேர் பெண்கள். 2024, ஜூலை 30 நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட 1.85 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெண்களுக்கு சொந்தமானவை.
பிரதமரின் ஜன்தன் திட்டக் கணக்குகள் பெண்களுக்கு அதிகாரம் அளித்திருப்பதோடு, சுயவேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் துறைகளில் அவர்களின் முன்னெடுப்புக்கு வழிவகுத்துள்ளது.
பிரதமரின் ஜன்தன் திட்டத்தை தொடங்குவது என்ற தொலைநோக்குப் பார்வையுடனான முடிவும், குறுகிய காலத்தில் அதன் வெற்றியும் இல்லாதிருந்தால், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சாதனை கணிசமான அளவு குறைந்திருக்கும்.