sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

திருப்பரங்குன்றம் தீபம்; தீர்ப்பும் திமுக அரசும்!

/

திருப்பரங்குன்றம் தீபம்; தீர்ப்பும் திமுக அரசும்!

திருப்பரங்குன்றம் தீபம்; தீர்ப்பும் திமுக அரசும்!

திருப்பரங்குன்றம் தீபம்; தீர்ப்பும் திமுக அரசும்!

7


ADDED : ஜன 08, 2026 08:42 AM

Google News

ADDED : ஜன 08, 2026 08:42 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை' என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்ட அமைச்சர் ரகுபதியோ, “சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்கலாம்; கண்ட இடத்தில் எரிக்க கூடாது. அதுபோல, தீபம் ஏற்றவேண்டிய இடத்தில்தான் ஏற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். இதுபற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர்?

தேவையற்ற பிரச்னை
தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இத்தகைய சர்ச்சைகளை கிளப்புவது சகஜமாகி விட்டது. எந்தவிதப் பிரிவினையும் இன்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். எண்ணற்ற பிரச்னைகள் இருக்கும்போது, சிலர் தனிநல ஆதாயத்திற்காக தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.” - உஷா, சரவணம்பட்டி


அர்த்தமற்ற வார்த்தைகள்
ஒரு தீர்ப்பு வழங்கப்படும் போது, சரியாக ஆராயாமல் நீதிபதிகள் தீர்ப்பளிப்பதில்லை. எனவே, இதற்கு மேல்முறையீடு செய்வது தேவையற்றது. கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதி அளித்தால் அது பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறுவது அர்த்தமற்றதாகும். - பிரபாகரன், டவுன்ஹால்


இந்துக்கள் இளிச்சவாயர்களா?
'தீர்ப்பை மதிக்காதவர் சட்ட அமைச்சராம். பிணம் எரிப்பதையும் தீபம் ஏற்றுவதையும் ஒப்பிடுகிறார் என்றால், இதைவிட கொடுமை வேறில்லை. எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் இந்துக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற இறுமாப்பு. யார் இளிச்சவாயர்கள் என்பது தேர்தலில் தெரியும். -ஜெயக்குமார், டவுன்ஹால்


மன்னிப்பு கேட்க வேண்டும்
அரசியல் சாசனத்தின் கீழ், பதவிப் பிரமாணம் எடுத்த அமைச்சர் பகிரங்கமாக ஒரு மதத்தை இழிவுபடுத்துவது மிகப்பெரிய குற்றம். அவர் பதவியில் நீடிக்க உரிமை கிடையாது. மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது கவர்னர் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். - லட்சுமிகாந்தன், மதுக்கரை


முடியுமா அமைச்சரால்?
'இந்த அரசு இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். தீபம் ஏற்றுவதை பிணம் எரிப்பதுடன் ஒப்பிட்டு அமைச்சர் பேசுவது பக்தர்களை வேதனைப்படுத்தும் செயல். வேறு மதத்தை இப்படி பேச முடியுமா அவரால்? -செந்தில்குமார், மதுக்கரை


நாகரிகமற்ற அணுகுமுறை
தீபம் ஏற்ற வேண்டும் என்ற மக்களின் உணர்வுக்கு எதிராக, அரசே செயல்பட வேண்டிய அவசியம் என்ன? நீதிமன்றம் சுட்டிக் காட்டிய பிறகாவது, மக்களின் மனநிலை புரிந்திருக்க வேண்டாமா? அரசு மேல்முறையீடு செய்வதும், அமைச்சர் விமர்சிப்பதும் நாகரிகமற்ற செயல். இது எங்கே போய் முடியும் என தெரியவில்லை. - மகேந்திரன், பூ மார்க்கெட்


தேவையில்லாத சர்ச்சை
பெண் கழுத்தில் ஆண் தாலி கட்டுவது தான், இதுவரை பின்பற்றப்பட்டு வரும் சம்பிரதாயம். இதைபோல தான் சுடுகாட்டில் பிணம் எரிப்பதும், கோயிலில் தீபம் ஏற்றுவதும். சட்ட அமைச்சரின் பேச்சு, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும். தேர்தல் சமயத்தில் தேவையற்ற சர்ச்சை அவருடைய கட்சியைதான் பாதிக்கும் என்று உணரவில்லை. - ஜி. செல்வராஜ், ராமநாதபுரம்


மக்கள் முட்டாள்கள் அல்ல
தி.மு.க. அரசு இந்துக்களின் வெறுப்பை சம்பாதிக்க அரும்பாடு படுகிறது. ஒரு மதத்தின் தலைவர்களை திருப்திப் படுத்த, இன்னொரு மதத்தை இழிவு படுத்துகிறது. முன்பு கொடுத்த தீர்ப்பை உறுதிப்படுத்தி வந்துள்ள தீர்ப்பையே தப்பு என்பது ஆணவத்தின் உச்சம். என்ன சொன்னாலும் மன்னித்து மறந்துவிட மக்கள் முட்டாள்கள் அல்ல. - அமர்குமார், வெள்ளக்கிணறு


இதே இவர்களுக்கு வேலை
நீதிமன்றம் எதையும் விசாரிக்காமலும், ஆதாரம் இல்லாமலும் தீர்ப்பளிக்காது. முதல் முறை அளித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தி இருந்தால் பிரச்னை இந்தளவுக்கு பெரிதாகி இருக்காது. அமைச்சர் ரகுபதி பேச்சு அநாகரிகமானது. இந்துக்களின் மனதை புண்படுத்தும் பேச்சு. இவர்களுக்கு இதேதான் வேலை. -சிவா, சிங்காநல்லுார்







      Dinamalar
      Follow us