திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உளவுத்துறை ரகசிய அறிக்கை!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உளவுத்துறை ரகசிய அறிக்கை!
ADDED : நவ 29, 2026 03:40 AM

புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம், தமிழக முதல்வர் விஜய் அரசுக்கு நெருக்கடியை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், தலைமை செயலர் சாய் குமார் உட்பட பல அதிகாரிகளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய உளவுத்துறை ஒரு ரகசிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும், பிரதமர் மோடிக்கும் சமர்ப்பித்துள்ளதாம். அதில், திருப்பரங்குன்றம் தீபத்துாண் குறித்து பல விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம்.
'இனி மேல் தீபத்துாணுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அயோத்தியில், சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போல, இங்கும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, எந்த நேரமும் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, சொல்லப்பட்டுள்ளதாம்.
இதைத் தான், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறைமுகமாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் போது தெரிவித்தார். அதாவது, 'மத்திய பாதுகாப்பு படை தான் பாதுகாப்பு தர வேண்டும்' என, அவர் வலியுறுத்தியதன்படி, உச்ச நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்று உத்தரவிட்டுள்ளது. 'இனி, திருப்பரங்குன்றம் மலைக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு தர முடியாது; மத்திய படை தான் என்கின்றனர்' மத்திய அரசு வழக்கறிஞர்கள். இனி, இந்த தீபத்துாண் தான், பா.ஜ.,வின் தமிழக பிரசாரமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
