தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ரயில் பயணத்தில் 'டார்ச்சர்'; சிவஸ்ரீக்கு கிடைத்த அதிர்ச்சி

ரயில் பயணத்தில் 'டார்ச்சர்'; சிவஸ்ரீக்கு கிடைத்த அதிர்ச்சி

ரயில் பயணத்தில் 'டார்ச்சர்'; சிவஸ்ரீக்கு கிடைத்த அதிர்ச்சி

9


UPDATED : செப் 25, 2026 04:19 AM

ADDED : செப் 25, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

9

UPDATED : செப் 25, 2026 04:19 AM ADDED : செப் 25, 2026 04:14 AM


9
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இசைக்கலைஞரும், பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவின் மனைவியுமான சிவஸ்ரீ, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு, வலைதளவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

'இன்றைய ரயில் பயணம் அதிர்ச்சிகரமாக இருந்தது. ரயில் பெட்டியில், ஆண்கள் 40 பேர் கொண்ட குழுவினர், பயணம் முழுதும் இடைவிடாமல் சத்தமாக பேசிக்கொண்டே இருந்தனர். அமைதியான ரயில் பயணம் என்ற என் விருப்பம், தகர்ந்து போனது.

'டி.டி.இ.,யிடம் புகார் கூறியதும், அந்த குழுவினர் வேண்டுமென்றே பாலிவுட் பாடல்களை பாட ஆரம்பித்தனர். இங்கு யார் வென்றார்கள் என்பது முக்கியமில்லை. இந்தியர்களாகிய நானும் அவர்களுடன் சேர்ந்து குடிமை உணர்வை பாதுகாப்பதில் தோற்று விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு தேசமாக நம் பொது நடத்தை எப்போது மேம்படும்? கடவுள், இந்த தேசத்தை காப்பாற்றட்டும்' என்று கூறியுள்ளார்.

முகத்தில் விழுந்த அறை

Image 1622755

ம.பி., மாநிலத்தில் மாசுபட்ட அஜ்னார் நதியை துாய்மை செய்து, நாடு முழுதும் அறிமுகமான கல்லுாரி மாணவர் பிட்டு தபாஹி, தொடர்ந்து வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளார். டில்லி, யமுனை நதியில் தன் குழுவினருடன் சென்று 3,000 கிலோ கழிவுகளை அகற்றிய பிட்டுவின் வீடியோவை பார்த்த தொழில் முனைவோர் அலோக் ஜெயின், 'இது, டில்லி உள்ளாட்சி நிர்வாகத்தின் முகத்தில் விழுந்த அறை' என்று விமர்சித்துள்ளார்.

ஆட்டோவில் அடைபட்ட பள்ளி குழந்தைகள்



மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில், பள்ளிக்குழந்தைகள் 17 பேரை அழைத்துச் சென்ற ஆட்டோவை வழிமறித்த ஒருவர், டிரைவரிடம் அது பற்றி கேள்வி எழுப்பிய வீடியோ, கவனம் பெற்றது.

Image 1622757

குழந்தைகள் மூட்டைகளை போல, ஆட்டோவில் நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர். பின்புறம் பொருட்கள் வைக்கும் இடத்தில் கூட, குழந்தைகள் இருந்தனர்.

'இத்தனை குழந்தைகளை அழைத்துச் செல்வீர்களா, இது சரியா' என, அந்த ஆட்டோ டிரைவரை பார்த்து கேள்வி எழுப்பினார் அந்த நபர். 'ஆட்டோவில் கிரில் இருக்கிறது' என்று கூறி முதலில் சமாளித்த டிரைவர், 'இனி இப்படி செய்ய மாட்டேன்' என்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், போக்குவரத்து போலீசார், அந்த ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நல்லோர் ஒருவர் உளரேல்...



குஜராத் மாநிலம், ஆமதாபாதை சேர்ந்த இ.என்.டி., அறுவை சிகிச் சை நிபுணரான டாக்டர் நந்த்லால் மன்சேடா, 81, வருவாய் அடிப்படையில் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பவர். நோயாளிகளால் என்ன முடியுமோ, அதை கட்டணமாக பெற்றுக் கொள்வார். தங்களுக்கு வருவாய் ஆதாரம் எதுவும் இல்லை என்றால், அவர்கள் கட்டணமும் தர தேவையில்லை என்பது தான் அவரது வழக்கம்.

Image 1622758

'மருத்துவ வசதி என்பது பெற முடியாத ஒன்று என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது' என்பது தான், மன்சேடாவின் நோக்கம். மருத்துவ கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அவரது சேவை பற்றிய செய்தி, சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

கருணையால் வந்தது வேதனை



தங்கையின் கண் அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் அறிவித்து பணம் வசூலித்த ஜெய் சிங் ரத்தோர் என்ற, 16 வயது சிறுவனின் செயல், பரபரப்பை ஏற்படுத்தியது. பரிதாபப்பட்ட வலைதளவாசிகள், ஒரே நாளில் சிறுவனுக்கு, 1.58 லட்சம் பணம் அனுப்பி விட்டனர். அந்த சிறுவனும், 'போதிய பணம் சேர்ந்து விட்டது. இனி யாரும் அனுப்ப வேண்டாம்' என்று கூறி பதிவுகளை அழித்து விட்டான்.

Image 1622759

அதன்பின், ஏற்பட்டதுதான் திடீர் திருப்பம். 'இது ஒரு மோசடி, அப்படி ஒரு நோயாளியே கிடையாது' என்று சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. நம்பி பணம் அனுப்பியவர்கள், வருத்தப்பட்டு வலைதளத்தில் கமென்ட்களை பதிவிடத் தொடங்கினர்.

பலருக்கு இப்போதுதான், ஏமாற்றியது சிறுவன் தானா என சந்தேகம் எழுந்தது. 'பணம் என் தங்கையின் சிகிச்சைக்கு அல்ல. என் தந்தையின் சிகிச்சைக்கு தேவைப்பட்டது. பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன், எங்கேயும் ஓட மாட்டேன்' என்று, அந்த எக்ஸ் கணக்கில் பதிவு வெளியாகியுள்ளது. கருணையோடு பணம் அனுப்பியவர்கள், கடுப்பில் காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us