தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/முதல்வர் அலுவலகம் இடமாற்றம் தற்காலிகம் தான்!

முதல்வர் அலுவலகம் இடமாற்றம் தற்காலிகம் தான்!

முதல்வர் அலுவலகம் இடமாற்றம் தற்காலிகம் தான்!

9


UPDATED : ஆக 19, 2026 05:38 AM

ADDED : ஆக 19, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

9

UPDATED : ஆக 19, 2026 05:38 AM ADDED : ஆக 19, 2026 05:23 AM


9
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''முதல்வர் அலுவலகம், 100 சதுரடியில் மட்டுமே உள்ளது. அவரைச் சுற்றி பணிபுரியும், 80 பேர் வசதிக்காகவே, தற்காலிக ஏற்பாடாக முதல்வர் அலுவலகம் இடமாறுகிறது,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:



தி.மு.க., கொறடா - எ.வ.வேலு: ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், ராஜாஜி, பக்தவத்சலம், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர், தமிழக முதல்வர்களாக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினர்.

தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு, தற்போதுள்ள முதல்வர் அறையில் இருந்து தான் திட்டங்களை தீட்டி ஏழ்மையை போக்கினர்.

ஆனால், தற்போதைய முதல்வர் அலுவலகத்தை, கோட்டை கட்டடத்தில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கு, 5.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டடம் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டது.

பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய கட்டடத்தில் இருந்து, தமிழர் கட்டிய கட்டடத்திற்கு முதல்வர் அலுவலகம் மாறுவதில், எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி தான். முதல்வரின் சொந்த விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது.

ஆனால், முதல்வர் அலுவலகத்தை மாற்றுவதால், தங்களுக்கு உணவு அருந்துவதற்கு இடம் இல்லை; மற்ற வசதிகள் இல்லை என, தலைமை செயலக ஊழியர்கள் சொல்கின்றனர்.

த.வெ.க., ஆட்சியில், டெண்டர்கள் வெளிப்படையாக இருக்கும் என, முதல்வர் கூறினார். ஆனால், முதல்வர் அலுவலகம் அமைக்க, 'ஆன்லைனில்' டெண்டர் வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: முதல்வர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் இன்னும் முடிவாகவில்லை.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் தலைமை செயலகத்தை மாற்ற நினைத்தனர். முதல்வர் விஜய் காலை, 9:30 மணிக்கு தலைமை செயலகம் வந்து, மாலை 5:30 மணிக்கு செல்கிறார்.

அவரை சந்திக்க அரசு அதிகாரிகள், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு துாதர்கள், பார்வையாளர்கள் வருகின்றனர்.

முதல்வர் அலுவலகம், 100 சதுரடியில் மட்டுமே உள்ளது. முதல்வரை சுற்றி, 80 பேர் உட்கார்ந்து வேலை செய்கின்றனர். அவர்களுக்கு கழிப்பறை வசதி கூட இல்லை. முதல்வர் சாதாரண ஹோட்டலில் சாப்பிடுவார்.

பிரசார வாகனத்தில் சாப்பிட்டு ஓய்வெடுப்பார். எனவே, அவரது வசதிக்காக அலுவலகம் மாற்றப்படவில்லை. அவருடன் பணிபுரிபவர்கள் வசதிக்காக, தற்காலிக ஏற்பாட்டிற்காக இடத்தை மாற்றுகின்றனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us