தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ த.வெ.க., வேட்பாளர் தேர்வு: 50 பேரிடம் விஜய் நேர்காணல்

 த.வெ.க., வேட்பாளர் தேர்வு: 50 பேரிடம் விஜய் நேர்காணல்

 த.வெ.க., வேட்பாளர் தேர்வு: 50 பேரிடம் விஜய் நேர்காணல்


ADDED : மார் 21, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: த.வெ.க.,வில் விருப்ப மனு அளித்த 50 பேரிடம், அக்கட்சி தலைவர் விஜய் நேற்று நேர்காணல் நடத்தினார்.

சட்டசபை தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் 60 பேரிடம், முதல் கட்டமாக கடந்த 10ம் தேதி விஜய் நேர்காணல் நடத்தினார்.

இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணையில் ஆஜராக டில்லி சென்றதால், நேர்காணல் நடக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 50 பேரிடம் நேற்று விஜய் நேர்காணல் நடத்தினார். அ ப்போது, தொகுதியில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து விஜய் கேட்டறிந்தார்.

மேலும், 'தேர்தல் பணிகளை உடனே மேற்கொள்ளுங்கள்; எந்தவித சந்தேகம் இருந்தாலும், தலைமை கழகத்தில் தொடர்பு கொண்டு பேசுங்கள். நிச்சயம் நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம்' என விஜய் தெம்பூட்டி உள்ளார்.

இதற்கிடையே, புதுச்சேரியில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளருக்கான நேர்காணலை, கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், கடந்த 16ம் தேதி நடத்தி, 30 பேரை தேர்வு செய்துள்ளார். அந்த பட்டியலை விஜயிடம் அளித்து ஆலோசித்த நிலையில், மார்ச் 18ல், புதுச்சேரி த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியாக இருந்தது.

ஆனால், தனித்து போட்டி என்பதால், செலவுக்கு பயந்து, சில வேட்பாளர்கள் பின்வாங்கினர். அவர்களிடம் பேச்சு நடத்தி, பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலை, விஜய் இன்று வெளியிட உள்ளார்.

அதன்படி, கட்சி ஆரம்பித்த பின், த.வெ.க., வெளியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் இது என்பதால், முதலில் தமிழகத்தில் விஜய் போட்டியிடும் தொகுதியின் பெயரை அறிவி த்து விட்டு, அதன் பிறகு புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை வெளியிடலாமா என த.வெ.க., நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us