டிரம்புக்கே அதிக வாய்ப்பு ? அமெரிக்க நிருபர் சிறப்பு தகவல்
டிரம்புக்கே அதிக வாய்ப்பு ? அமெரிக்க நிருபர் சிறப்பு தகவல்
UPDATED : நவ 05, 2024 11:20 AM
ADDED : நவ 05, 2024 10:37 AM

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்புக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் அதிகம் வாழும் இந்திய வம்சாவளியினர் டிரம்புக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வேலை வாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியினருக்கு பெரும் வகையில் உதவி செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.
பெரிய மாகாணங்கள்
பெரிய மாகாணங்களான கலிபோர்னியா, டெக்ஸாஸ், பிளோரிடா, நியூயார்க்,இல்லினாய்ஸ்,பென்சில்வேனியா, ஜியார்ஜியா,நியூஜெர்ஸி, ஓஹியோ, வாஷிங்டன் ஆகியவற்றில் டிரம்புக்கே அதிக ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய மாகாணம் டெக்ஸாஸ் ஆகும். இங்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் குறைந்தபட்சம் 6 சதவீத வித்தியாசத்தில் கூடுதல் ஓட்டுக்கள் டிரம்புக்கு கிடைக்க வா ய்ப்பு உள்ளது. டெக்ஸாசில் பெரிய நகரங்களில் கமலாவுக்கு ஆதரவு உள்ளது. சிறிய, சிறிய பகுதிகளில் டிரம்புக்கு ஆதரவு அதிகம் உள்ளது. மேலும் அமெரிக்காவில் பழமைவாதம் வலதுசாரி சிந்தனை அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிந்தனை மேலும் வளர்ந்துள்ளதால் பலர் டிரம்புக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நமது அமெரிக்க செய்தியாளர் ரெட்டி அழகர்சாமி
