தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/த.வெ.க.,விற்கு எதிரி இனி அண்ணாமலை தானா?: அந்துமணி பதில்கள்

த.வெ.க.,விற்கு எதிரி இனி அண்ணாமலை தானா?: அந்துமணி பதில்கள்

த.வெ.க.,விற்கு எதிரி இனி அண்ணாமலை தானா?: அந்துமணி பதில்கள்

12


ADDED : அக் 24, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

12

ADDED : அக் 24, 2026 05:33 AM


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீ.வீரா, காஞ்சிபுரம்:


தினமும் போராட்டம் என்ற பெயரில், பொதுமக்களை துன்புறுத்தும் அபிஜித் தீப்கே, ராகுல் போன்றோரை, மக்கள் எதிர்க்கும் நாள் தொலைவில் இல்லையே?



டில்லி மக்கள், இத்தகைய போராட்டக்காரர்களால் முகம் சுளிப்பதாகக் கேள்விப்படுகிறேன். வியாபாரிகள் ஏற்கனவே, தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு போட்டனர். இளைஞர்களாகவே இருந்தாலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிட்டால், பொதுமக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

எம்.சம்சுகனி, துாத்துக்குடி:


வங்கதேச கலகத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு சிலர், அதை முன்மாதிரியாகக் கொண்டு, நம் நாட்டிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், ஜனநாயகம் என்பது குழப்பத்தை விதைப்பதற்கான உரிமம் அல்ல ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறாரே?



அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்னபடி, மேற்படி, 'பார்ட்டி'கள், வெளிநாட்டு கைக்கூலிகள் என்பதை, அவர்களின் பின்னணியைப் படித்தால் புரிகிறது. பின்புலத்தில் உள்ளவர்களின் இலக்கே, நம் நாட்டின் ஜனநாயகத்தை அழித்து, நாட்டை, ஆட்சியைக் கைப்பற்றுவது தான்! இன்னும் சில மாதங்கள்... நடக்கப் போவதை பார்க்கத் தானே போகிறோம்!

ப.சினேகா, ஈரோடு:


அமெரிக்க தேர்தலில் தனக்கு போட்டியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் நாடு தீப்பற்றி எரியும் என, டிரம்ப் எச்சரிப்பது?



Image 1635205
நம்மூர் லோக்கல் ரவுடி போல பேசியுள்ளார் டிரம்ப். அமெரிக்கர்களே அவரது பேச்சை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

பி.ஜெ.பிரகாஷ், தேனி:


'இனிவரும் தேர்தல்களில், த.வெ.க.,விற்கு எதிரி தி.மு.க., கிடையாது. மாஸான தலைவர் அண்ணாமலை தான் எதிரி' என்று, நாஞ்சில் சம்பத் கருத்து பற்றி?



அண்ணாமலை, ஒரு இன்னோவா கார் பார்சல் தயார் நிலையில் வைத்திருக்கட்டும் என்று அர்த்தம்.

ஆர்.கோசலை, நாகர்கோவில்:


ராகுல் ரகசியமாக வெளிநாடுகளுக்கு பறந்து விடுவது ஏன்?



அவர் இப்போது வியட்நாம் சென்றுள்ளதை தானே கூறுகிறீர்கள். அவர் ஏதாவது போராட்டம் என ஆரம்பிப்பார். அது எக்குதப்பாக தன் கையை மீறி போகும்போது, இப்படி 'கிரேட் எஸ்கேப்' ஆகிவிடுவது அவரது வழக்கம் தான், கோசலை!

ப.பாஸ்கரன், கடலுார்:


பத்து ரூபாய் கோழி முட்டைக்கு அரிவாள் வெட்டு. நம் மக்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றனர்?



பொறுமையும், சக மனிதர்களை மதிக்கும் பண்பும் குறைந்து விட்டதைக் காட்டுகிறது!

பி.சி.ரகு, விழுப்புரம்:


'வி.சி.க.,வின் நிலைப்பாடு ஒன்று தான்... ஜாதியவாத பா.ம.க., மதவாத பா.ஜ., ஆகிய கட்சிகளுடன், எப்போதும் எங்களுக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' என்கிறாரே அமைச்சர் வன்னியரசு?



மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா... மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us