தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ கலக்கத்தில் மத்திய அமைச்சர்கள்!

கலக்கத்தில் மத்திய அமைச்சர்கள்!

கலக்கத்தில் மத்திய அமைச்சர்கள்!

14


ADDED : செப் 20, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 04:15 AM

14


14
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இம்மாதம் 23, 24ம் தேதிகளில் டில்லியில் சிந்தனை அமர்வு எனப்படும், 'சிந்தன் சிவிர்' என்கிற ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் பிரதமர் மோடி. அனைத்து மத்திய அமைச்சர்களும் இதில் பங்கேற்பர்.

மூன்றாம் முறையாக மோடி பிரதமராகி இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். சுய முன்னேற்றம், மக்களுடன் தொடர்பு, நிர்வாகம் ஆகியவை குறித்து இங்கு அலசப்படும்.

அமைச்சர்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், அமைச்சகங்களிடையே ஒருங்கிணைப்பு என, பல விஷயங்கள் குறித்து பிரதமர் பேசுவார். பள்ளியில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் மார்க் அடங்கிய, 'ப்ரோகரஸ் ரிப்போர்ட்' போல அமைச்சர்களின் ரிப்போர்ட்கள் பிரதமருக்கு அளிக்கப்படும்.

எனவே, இந்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றம் என, கடந்த 6 மாதங்களாக செய்திகள் அடிபட்டும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், அமைச்சரவை மாற்றப்படலாம் என பேசப்படுகிறது. பல அமைச்சர்கள் தங்கள் பதவி பறிபோகுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.

அமைச்சரவை மாற்றம் நடக்குமா? நடக்காதா என்பது இருவருக்கு மட்டுமே தெரியும்; ஒருவர் பிரதமர், மற்றொருவர் அமித் ஷா என்கின்றனர் பா.ஜ.,வினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us