மகன் வெல்ல வைகோ வியூகம்: நிர்வாகிகள் திருச்சியில் முகாம்
மகன் வெல்ல வைகோ வியூகம்: நிர்வாகிகள் திருச்சியில் முகாம்
UPDATED : ஏப் 08, 2024 12:27 AM
ADDED : ஏப் 07, 2024 10:51 PM

திருப்பூரில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயனுக்கு பிரசாரம் செய்ய, காங்., பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் நாகராஜ் பங்கேற்கவில்லை. கூட்டம் நடந்த இடத்தில் ம.தி.மு.க., பகுதி, கிளை நிர்வாகிகளே இருந்தனர். மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், திருச்சியில் முகாமிட்டிருப்பதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் ம.தி.மு.க.,வினர் திருச்சியில் முகாமிட்டுள்ளதால், பிற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்வதில்லை என்று கூட்டணிக்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
திருச்சியில் போட்டியிடும் மகன் துரையை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து பணிகளிலும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முழுமூச்சாக இறங்கியுள்ளார். செயலாளர், அவைத் தலைவர், இணை, துணை செயலாளர், அமைப்பு நிர்வாகிகள் உட்பட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த ம.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஒரு சட்டசபை தொகுதி அல்லது ஒரு வார்டு பகுதி வாக்காளர் எண்ணிக்கைக்கேற்ப ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகிகளை வைகோவே நேரடியாக போன் செய்து அழைப்பு விடுத்துள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். திருச்சியில் 'களம்' கண்டுள்ள ம.தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'சகல' வசதிகளும் செய்து தரப்படுகிறது.

