தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/திருச்சி கிழக்கு தொகுதியில் விசிக நிர்வாகி போட்டி? திருமா சொல்வது இதுதான்

திருச்சி கிழக்கு தொகுதியில் விசிக நிர்வாகி போட்டி? திருமா சொல்வது இதுதான்

திருச்சி கிழக்கு தொகுதியில் விசிக நிர்வாகி போட்டி? திருமா சொல்வது இதுதான்

7


UPDATED : ஜூன் 18, 2026 06:26 AM

ADDED : ஜூன் 18, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 06:26 AM ADDED : ஜூன் 18, 2026 05:37 AM

7


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: “ஒரே மாதத்தில், த.வெ.க., அரசு குறித்து, எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில், 13 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறியிருப்பதற்கு, ஏற்கனவே, ஆட்சியில் இருந்த தி.மு.க., தான் பதில் சொல்ல வேண்டும். புதிதாக பதவியேற்ற த.வெ.க., அரசுக்கு, கற்றுக் கொள்ளும் காலம், என்று தான் சொல்ல முடியும். எனவே, ஒரு மாத கால ஆட்சியை பற்றி மதிப்பீடு சொல்ல இயலாது.

அ.தி.மு.க.,வில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன நெருக்கடி என்பது அவர்களுக்கு தான் தெரியும். திராவிட இயக்கம் என்ற முறையில், அ.தி.மு.க., வலுவாகவும், சிதறாமலும் இருப்பது தான் தமிழக அரசியலுக்கு நல்லது.

வி.சி.க., முதன்மை செயலர் ஷா நவாஸ், புதிய கட்சி தொடங்கி, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது தவறான தகவல். வெளிநாடு சென்று திரும்பி இருக்கும் அவர், கட்சி தலைமையோடு தொடர்பில் தான் இருக்கிறார். விரைவில் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

அவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கவில்லை என்பதை தவிர, அவருக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. திட்டமிட்டு, வி.சி.க.,வை குறி வைத்து அவதுாறுகளை பரப்புகின்றனர். எளிய மக்களுக்கான இந்த இயக்கத்தை உடைத்து, என்ன சாதிக்கப் போகின்றனர் என்று விளங்கவில்லை. எங்கள் கட்சிக்குள் குழப்பமும் இல்லை; எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us