தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ வேத நெறிகளே தேச ஒற்றுமையின் ஆணிவேர்: கவர்னர் ரவி பேச்சு

 வேத நெறிகளே தேச ஒற்றுமையின் ஆணிவேர்: கவர்னர் ரவி பேச்சு

 வேத நெறிகளே தேச ஒற்றுமையின் ஆணிவேர்: கவர்னர் ரவி பேச்சு


ADDED : நவ 29, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''வேத நெறிகளே தேச ஒற்றுமையின் ஆணிவேர்,'' என தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.

இன்டக்ரேட்டட் அகாடமி பார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, பாகவத சேவா டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பில், சென்னை தி.நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில், 25ம் ஆண்டு 'நாம சங்கீர்த்தனம்' துவக்க விழா நேற்று நடந்தது.

இதில், யக்ஞராம ஷர்மாவுக்கு சங்கீர்த்தன கலாநிதி மற்றும் கோபி பாகவதருக்கு சங்கீர்த்தன சூடாமணி ஆகிய விருதுகளை, தமிழக கவர்னர் ரவி வழங்கி பேசியதாவது:

நாம சங்கீர்த்தனம் என்பதற்கு பெரிய பாரம்பரியம் உள்ளது. பாரம்பரிய, பண்பாட்டு பெருமை உடைய நம் நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினர், அவற்றை அழிப்பதில் குறியாக இருந்தனர். கடந்த 17ம் நுாற்றாண்டில் பிரிட்டிஷார், உலகின் பல பகுதிகளை கைப்பற்றினர். வேற்று மொழி பேசும் பிரதேசங்களை, அவர்கள் வெவ்வேறு நாடாக பிரித்தனர்.

அதேபோல், பாரதமும் பல மொழிகள் பேசும் பகுதியாக இருந்தாலும், மக்கள் ஒரே பண்பாட்டை உடையவர்களாக இருந்தனர். பக்தி நெறி வழியாக வேத கருத்துகளை பின்பற்றி, சனாதன தர்மத்துடன் வாழ்ந்தனர். ஆங்கிலேயர்களால் இதை வெவ்வேறு நாடாக்க முடியவில்லை. இங்கு வேற்றுமை தான் பலம்; பக்தி தான் ஒற்றுமைக்கான ஆணிவேர்.

நாட்டில் பக்தி பாடல்களின் வழியாக வேத கருத்துகளை பரப்ப, நாம சங்கீர்த்தனம் என்ற பாடல் அமைப்பு உருவானது.

இது, மொழி, இன எல்லைகளை கடந்து, அன்னமாச்சார்யாவின் தோடயமங்கலம், ஜெயதேவரின் கீத கோவிந்தம், அஷ்டபதி, நாராயண தீர்த்தத்தின் கிருஷ்ண லீலா தரங்கிணி, பத்ராசல ராமதாசரின் தெலுங்கு கீர்த்தனைகள், புரந்தரதாசரின் தேவர்நாமா மட்டுமின்றி துலாஸ்கேர்ஸ், மீராபாய் உள்ளிட்டோரின் பக்திப் பாடல்கள், எல்லைகளை கடந்து பக்தர்களை ஒருங்கிணைத்தன.

தமிழகத்தில் மருதாநல்லுார் சத்குரு சுவாமிகள், நாம சங்கீர்த்தனத்தை முன்னெடுத்தார். பக்தி நெறியை பரப்பியோர், பெரிய கல்வியாளர்களாக இருந்ததில்லை.

ஆனால், அவர்களின் உள்ளத்தில், அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற எண்ணம் இருந்தது.

இதனால், 1,000 ஆண்டுகளை கடந்தும், கோவில்களால் மக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். பக்தி பாடல்கள், பக்தர்களை உற்சாகப்படுத்தி, ஒருநிலைப்படுத்தும் வழிமுறை. அனைவரையும் இணைக்கும் மொழியாக சமஸ்கிருதமும், வேத மந்திரங்களும் இருந்தன.

இந்த பக்தி நெறி மிக்க ஹிந்து தர்மம் அழியும் போது, நாம் பாரதத்தினர் என்ற உணர்வற்று சிதைந்து விடுவோம். அவ்வாறு அல்லாமல், நம் தமிழக மக்களை ஒருங்கிணைத்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் வணக்கத்துக்கு உரியவர்கள்.

இது போன்ற நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் வருவதில்லை என குறைபடுவோர் உண்டு. நான் சந்திக்கும் இளைஞர்கள், பொறுப்பு மிக்கவர்களாக உள்ளனர்.

அவர்கள், நம் தர்மத்தின் மீதும், தாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்து திரும்பி வருவர். அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்க, வேத நெறிகள் பொதிந்த தெய்வீகப் பாடல்களை பாட வேண்டும். அது தான் தேச ஒற்றுமையின் ஆணிவேர். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us