தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ வடக்கில் பிரபலமாகும் விஜய்!

வடக்கில் பிரபலமாகும் விஜய்!

வடக்கில் பிரபலமாகும் விஜய்!

37


ADDED : செப் 06, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

37

ADDED : செப் 06, 2026 04:18 AM


37
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பார்லிமென்டில் பல நிலைக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்; நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வுகளின்போது தாங்கள் சேகரித்த விபரங்கள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை, பார்லி., செயலக அதிகாரிகள் உதவியுடன், எம்.பி.,க்கள் முழுமையாக தொகுத்து, அறிக்கையாக பார்லிமென்டில் தாக்கல் செய்வர்.

இந்த நிலைக்குழு தலைவர்களுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை அளித்துள்ளார். 'மாநிலங்களுக்கு செல்லும்போது, சம்பந்தப்பட்ட முதல்வர்களை சந்தித்து மாநில வளர்ச்சி, தேவைகள் என, பல விஷயங்களை விவாதியுங்கள்; அப்போது தான் மாநிலத்திற்கு என்ன தேவை என்பது தெரிய வரும்; அதை வைத்து பார்லி.,யில் பேசலாம். தமிழகம் செல்வோர், முதல்வர் விஜயை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்; ஏனெனில், கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டில் ஆட்சியைப் பிடித்தவர்; அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து, நிலைக்குழுவில் உள்ள மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா எம்.பி.,க்கள், முதல்வர் விஜயை சந்திக்க ஆவலாக உள்ளனர்; ஒரு சில நிலைக்குழு எம்.பி.,க்கள் முதல்வரை சந்தித்து விட்டனராம்.

விஜய் குறித்த காணொளிகளை, வட மாநிலங்களில் பலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அடுத்து, இப்போது வட மாநிலங்களில் பிரபலமாக இருப்பவர், முதல்வர் விஜய் தான். 'இதனால் தான், அடுத்த பிரதமர் விஜய்' என, த.வெ.க.,வினர் கூறி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us