sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வி.ஐ.பி., தொகுதியாக மாறும் விருத்தாசலம்: விஜயகாந்துக்கு பிறகு விஜய் போட்டி?

/

வி.ஐ.பி., தொகுதியாக மாறும் விருத்தாசலம்: விஜயகாந்துக்கு பிறகு விஜய் போட்டி?

வி.ஐ.பி., தொகுதியாக மாறும் விருத்தாசலம்: விஜயகாந்துக்கு பிறகு விஜய் போட்டி?

வி.ஐ.பி., தொகுதியாக மாறும் விருத்தாசலம்: விஜயகாந்துக்கு பிறகு விஜய் போட்டி?

2


ADDED : அக் 21, 2025 06:17 AM

Google News

2

ADDED : அக் 21, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு முதல் வெற்றி வாய்ப்பை கொடுத்த விருத்தாசலம் தொகுதியில், நடிகர் விஜய் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில், அதிக கிராமங்களை கொண்டது விருத்தாசலம் சட்டசபை தொகுதி. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.

பா.ம.க., கோட்டையாக இருந்த இத்தொகுதியில், 2006 சட்டசபை தேர்தலில் களமிறங்கிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

அடுத்து நடந்த தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர் முத்துக்குமார் வெற்றி பெற்றார். இது அக்கட்சிக்கு தொகுதியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. இதனால், பா.ம.க., கோட்டையில் ஓட்டை விழுந்தது' என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு, அ.தி.மு.க., எதிர்ப்பு போன்ற காரணங்களால் தே.மு.தி.க., அத்தொகுதியில் பின்னடைவை சந்தித்தது. அதற்கடுத்து அவரது மரணம், நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு ஓட்டம் என, தே.மு.தி.க., செல்வாக்கை மீண்டும் அங்கு பெற முடியவில்லை.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய நடிகர் விஜய், இரண்டாவது மாநில மாநாட்டில் 'கேப்டன் விஜயகாந்த்' எனது அண்ணன் என குறிப்பிட்டு பேசினார். இதனை, விஜயகாந்த் மனைவியும், தே.மு.தி.க., பொதுச் செயலாளருமான பிரேமலதா விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், விஜயகாந்துக்கு முதல் வெற்றி வாய்ப்பை கொடுத்த, விருத்தாசலம் தொகுதி, விஜய்க்கும் வெற்றி வாய்ப்பை தரும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

அதுபோல், அவரது குடும்ப ஜோதிடர் ஒருவர், 'வி' என்ற முதல் எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கணித்து கூறியுள்ளார்.

'வி' என்றால் 'விக்டரி', வெற்றி என அர்த்தம். விஜய் என்ற பெயரின் முதல் எழுத்து 'வி' என்பதால், அதே எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிடுவது சிறந்தது என கூறப்படுகிறது. இதனால், விஜயகாந்தை அண்ணன் என கூறும் த.வெ.க., தலைவர் விஜய், விருத்தாசலம் தொகுதியை 'குறி' வைப்பதாகவே கூறப்படுகிறது.

இதற்காக தொகுதியின் பலம், பலவீனம் மற்றும் மக்களின் வருவாய் ஆதாரம், எதிர்ப்பார்ப்பு மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க.,வின் கட்டமைப்பு குறித்த விவரங்களை த.வெ.க., வினர் சேகரித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில், விருத்தாசலத்தில் விஜய் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என பரவலாக பேசப்படுகிறது.

நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து, நடிகர் விஜயும் களமிறங்க தயாராகி வருவதால், விருத்தாசலம் தொகுதி வி.ஐ.பி., அந்தஸ்து பெரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரி விக்கின்றனர்.






      Dinamalar
      Follow us