நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: ஸ்ரீராம் சேனா
நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: ஸ்ரீராம் சேனா
ADDED : ஜூலை 22, 2025 03:29 AM

ஓசூர் : “ஓட்டுக்காக ஹிந்துக்களை அவமதிப்பது சரியல்ல,” என, ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அவர் அளித்த பேட்டி:
தமிழக கிராமங்களில், கிறிஸ்துவர்கள் அதிகளவில் மதமாற்றம் செய்கின்றனர். முஸ்லிம்கள், ஜிகாதி மூலம் ஹிந்துக்களுக்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வருகின்றனர். அதற்கு தி.மு.க., அரசு துணை போகிறது.
மாநிலம் முழுதும் கோவில்களை தாக்குவோரை, ஸ்ரீராம் சேனா தடுக்கும். நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். ஆனால், தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.
மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் ஹிந்துக்களுக்கு, குழந்தை பிறந்த நாளிலேயே, 1 லட்சம் ரூபாயும், நான்காவது குழந்தை பெற்றால், 2 லட்சம் ரூபாயும் டிபாசிட் செய்வோம். இது கர்நாடக மாநிலத்தில் நடந்து வருகிறது.
விபூதி, குங்குமம், வளையல், பூ அணிவது ஹிந்துக்களின் தர்மம். வெறும் ஓட்டுக்காக சிலர், ஹிந்துக்களை அவமதிப்பது சரியல்ல. இதற்காக நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.