sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை

/

வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை

வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை

வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை

8


ADDED : ஜூன் 05, 2025 06:41 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 06:41 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், இந்தாண்டு சீசனில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, கட்டுப்பாடுகளை அதிகரிப்பதோடு, அவசர சிகிச்சை மருத்துவ வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள, தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர்.

இந்தாண்டு, பிப்.,1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற, வனத்துறையினர் அனுமதித்தனர். வழக்கமாக மே 31ம் தேதி வரை அனுமதிக்கப்படும் நிலையில், தொடர் கனமழையின் காரணமாக, இந்தாண்டு, மே 25ம் தேதியுடன், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது.

இந்தாண்டில் 7 பேர் உயிரிழப்பு


வெள்ளியங்கிரி மலை, 5.5 கி.மீ., தொலைவு கொண்ட, 7 மலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்திலிருந்து, சுமார் 6 ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலையில், 7 மலைகளும், ஏழு விதமான இடங்களாக உள்ளது. இந்தாண்டு மலை ஏறிய ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புக்கான காரணம் மற்றும் தடுப்பதற்கான வழி என்ன என்பது குறித்து மலைவாழ் மக்களிடம் கேட்டபோது, '7 மலைகளும், ஒரேபோல இல்லை. ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு கால நிலையில் இருக்கும். மலையேறுபவர்கள், முழு உடற்தகுதி கொண்டு இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், உடல் உழைப்பு இல்லாத பணி மேற்கொள்பவர்களுக்கு, இது சிரமமானது.

மருத்துவ வசதி


அடிவாரத்தில், மலையேறும் இடத்துக்கும், மருத்துவ முகாம் அமைந்துள்ள இடத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. படிக்கட்டுப் பாதையில் வனத்துறையினர் சோதனை செய்யும் இடத்தில், மருத்துவ முகாம் அமைத்து, மலையேறுபவர்களை, சோதனை செய்து அனுப்ப வேண்டும்.

7 மலைகளில், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆறாவது மலைதான் மிக சிரமமான மலை. இம்மலைகளிலேயே பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், இம்மலைகளிலும், மருத்துவ முகாம்கள் அமைத்தால், முதலுதவி செய்து, பெரும்பாலான உயிரிழப்புகளை தடுக்கலாம்.

அதோடு, கன மழையால், மலைப்பாதை மிகவும் மோசமாகியுள்ளது. பாறைகளில் அரிப்பு ஏற்பட்டு, கால் வைப்பது சிரமமாக உள்ளது. மரங்களின் வேர்கள் பாதையில் இருப்பதால், அதில், கால் சிக்கி பலரும் விழுகின்றனர்.

7வது மலையில், பலகார மேடை அருகே உள்ள பாதை மிகவும் மோசமானது. அதில், இறங்கும் பலரும் அடிபடுகின்றனர். ஏழு மலைகளிலும் மலைப்பாதைகளை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலையின் மேலே மரணமடைந்த அந்த ஏழு பேர்

n மார்ச் 25: பெங்களூருவை சேர்ந்த சிவா, 36 என்பவர், தனது நண்பர்களுடன் மலையேறிவிட்டு கீழே இறங்கும்போது, மூன்றாவது மலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்.n ஏப்., 11: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், 42, தனது நண்பர்களுடன் மலையேறி சுவாமி தரிசனம் செய்து, ஆறாவது மலை இறங்கும் போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.n ஏப்., 19: தூத்துக்குடி மாவட்டம், மேலூரை சேர்ந்த புவனேஷ், 18 நண்பர்களுடன் மலையேறிவிட்டு, இறங்கும்போது, 7வது மலையில், மழை ஈரத்தில் பாறையில் கால் வழுக்கி விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.n மே 7: உடுமலையை சேர்ந்த, சுந்தரம்,54 என்பவர், முள்ளாங்காட்டில் உள்ள ஆசிரமத்தில் தங்கி, வெள்ளியங்கிரி ஆறாவது மலையில் உள்ள கடையை, கவனித்துவிட்டு தூங்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.n மே 13: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஷ்வா, 15 தனது தந்தையுடன் மலையேறிவிட்டு, கீழே இறங்கும்போது, மூன்றாவது மலையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.n மே 25: புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்த கவுசல்யா,45 என்பவர், 7வது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கும்போது, 6வது மலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.n மே 25: திருவண்ணாமலையை சேர்ந்த செல்வகுமார்,32 என்பவர், ஐந்தாவது மலையில் கீழே இறங்கி கொண்டிருக்கும் போது,மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.








      Dinamalar
      Follow us