தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/போக்குவரத்து கழகத்தில் முழுமையான மாற்றம் எப்போது?

போக்குவரத்து கழகத்தில் முழுமையான மாற்றம் எப்போது?

போக்குவரத்து கழகத்தில் முழுமையான மாற்றம் எப்போது?

3


ADDED : ஜூலை 31, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 06:13 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தில் சேர்ந்தாலும் இனி 'ஓபி' அடிக்க முடியாத வகையில் போக்குவரத்து கழக விதிமுறைகள் மாற்றப்பட்டதற்கு, அரசு பஸ் ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் உடற்தகுதி இழந்தவர்களுக்கு தகுதிக்கேற்ற மாற்றுப்பணி வழங்கும் முறையில் முழுமையான மாற்றம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் ஆளுங்கட்சி சங்கங்களைச் சேர்ந்த நடத்துநர், ஓட்டுநர்களுக்கு இதரப்பணி என்ற பெயரில் எந்த நிர்வாக பணியும் வழங்கக்கூடாது என மார்ச் 5ல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனால் போக்குவரத்து பணிமனைகளில் அவர்களுக்கு பதிலாக விபத்து, மருத்துவ காரணங்களால் உடற்தகுதி இழந்த ஓட்டுநர்கள், நடத்துநர்களை வைத்து பணியிடங்களை நிரப்பி வருகின்றனர்.

ஊழியர்கள் கூறியதாவது: பணிமனைகளில் ஆளுங்கட்சி தொழிற்சங்கங்கள் மாற்றுப்பணி நடைமுறையை தவறாக பயன்படுத்தினர். பணிக்கு வராமல் சம்பளம் பெறுவதால் போக்குவரத்து துறைக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஊழியர்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

ஆனாலும் எங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வரை படித்துள்ளவர்களே அதிகம் உள்ளோம். திடீரென்று மாற்றுப்பணி என்ற பெயரில் கம்ப்யூட்டரில் பணி செய்ய சிரமமாக உள்ளது. இதில் லட்சக்கணக்கான பணத்தை கையாள்வதால், பயத்துடனே வேலைசெய்கிறோம். பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புதல், வாகன பராமரிப்பு, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார்.

போக்குவரத்து உயரதிகாரிகள் கூறியதாவது: விபத்தில் கை, கால் இழந்தவர்கள், நீண்ட நேரம் நிற்க முடியாதவர்கள் போன்றவர்களுக்கு அவர்களுக்கு உடற்தகுதிக்கேற்ற மாற்றுப்பணியை உரிய பயிற்சி அளித்தே வழங்குகிறோம். அரசு பஸ் நடத்துநர்கள் பத்தாம் வரை படித்திருந்தாலும் ஏற்கனவே தினசரி கணக்கு வழக்குகளை பார்த்த அனுபவம் உள்ளவர்கள்.

இவர்களுக்கு கம்ப்யூட்டரில் ஐகான்களை 'கிளிக்' செய்து, எந்தெந்த டிக்கெட்டுகள் விற்றுள்ளன என 'டைப்' செய்வது, பண மதிப்பை எழுதுதல் போன்ற எளிய வேலை மட்டுமே வழங்குகிறோம்.

தற்போது மகளிருக்கான இலவச பஸ் வசதி, இ - டிக்கெட் உள்ளிட்டவற்றால் பணம் எண்ணும் பணிச்சுமை வெகுவாக குறைந்துள்ளது. பணம் எண்ணுவதற்கு மெஷின் வசதியும் உள்ளது. ஆனால் கம்ப்யூட்டரில் 'புரோகிராம்' செய்ய வற்புறுத்துவது போல் சிலர் மிகைப்படுத்துகின்றனர். அவர்களை கணக்கில் கொள்ளாமல் மாற்றுப்பணியை கற்றுக்கொள்ளும் ஊழியர்கள் மனநிலைக்கு வரவேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us